சினிமா செய்திகள்

நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல் + "||" + Intimidating actress Andrea

நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்

நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்
நடிகை ஆண்ட்ரியாவுக்கு, அவரது முன்னாள் காதலர் மிரட்டல் விடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, உத்தம வில்லன், துப்பறிவாளன், வடசென்னை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். சமீபகாலமாக படங்களில் அவர் நடிக்கவில்லை.

இந்த நிலையில் பெங்களூருவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஆண்ட்ரியா பேசும்போது ஒருவருடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும் அவர் மோசம் செய்து விட்டதாகவும் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.

ஆண்ட்ரியா பேசும்போது, நான் திருமணமான ஒருவருடன் தகாத தொடர்பில் இருந்தேன். அவர் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் என்னை துன்புறுத்தினார். இதன் காரணமாக மன அழுத்தத்துக்கு உள்ளானேன். இதனால் சினிமாவில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்தேன். அதில் இருந்து மீள ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்துக்கொண்டேன்.

இந்த தகவல்களை நான் எழுதி உள்ள புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளேன். அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்களும் புத்தகத்தில் இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த புத்தகம் ஓரிரு நாளில் விற்பனைக்கு வருகிறது. ஆண்ட்ரியாவை ஏமாற்றியவர் நடிகரா? அரசியல்வாதியா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆண்ட்ரியாவுக்கு போனில் மிரட்டல்கள் வருவதாக கூறப்படுகிறது. திருமணமான முன்னாள் காதலர் இந்த மிரட்டலை விடுப்பதாகவும் புத்தகத்தை வெளியிட கூடாது என்று அவர் எதிர்ப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. “மாஸ்டர்” பற்றி நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட ருசிகர தகவல்
நடிகை ஆண்ட்ரியா மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
2. மதுரை பஸ் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் சோதனையால் பரபரப்பு
மதுரை பஸ் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, போலீசார் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல்: பா.ஜனதா பொதுச்செயலாளர் உள்பட 350 பேர் மீது வழக்கு
மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பா.ஜனதா பொதுச்செயலாளர் உள்பட 350 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. மின்இணைப்பை துண்டிக்க சென்ற ஊழியரிடம், நிருபர்கள் என்று மிரட்டிய அண்ணன்-தம்பி கைது
தேனியில் மின்இணைப்பை துண்டிக்கச் சென்ற ஊழியரிடம் தங்களை நிருபர்கள் என்று கூறி மிரட்டிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
5. பா.ஜனதா ஆட்சி அமைப்பதற்காக அஜித்பவார் மிரட்டப்பட்டார் - சஞ்சய் ராவத் பரபரப்பு பேட்டி
ஆட்சி அமைப்பதற்காக பாரதீய ஜனதாவுடன் சேருவதற்கு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் மிரட்டப்பட்டார் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.