சினிமா செய்திகள்

பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கும் தீபாவளி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை-அமைச்சர் கடம்பூர் ராஜு + "||" + For any movie including Bigil Diwali not allowed for special scenes Minister Kadambur Raju

பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கும் தீபாவளி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை-அமைச்சர் கடம்பூர் ராஜு

பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கும் தீபாவளி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை-அமைச்சர் கடம்பூர் ராஜு
’தீபாவளியையொட்டி வெளியாகும் பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை’ என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறி உள்ளார்.
சென்னை,

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

"பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கும் தீபாவளி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. அனுமதித்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் திரைப்படங்களை திரையிட்டால் திரையரங்குகள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும். அதிக விலைக்கு டிக்கெட் விற்பனையில்லை என உறுதியளித்தால் சிறப்பு  காட்சிக்கு அனுமதி அளிக்க பரிசீலிக்கப்படும்" என கூறினார்.