சினிமா செய்திகள்

அசுரன் நடிகை அளித்த புகாரின் பேரில் இயக்குனரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு + "||" + Police to enquire into Manju Warrier’s complaint against director Sreekumar Menon

அசுரன் நடிகை அளித்த புகாரின் பேரில் இயக்குனரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு

அசுரன் நடிகை அளித்த புகாரின் பேரில் இயக்குனரிடம் விசாரணை  நடத்த  போலீசார் முடிவு
நடிகை மஞ்சு வாரியரின் புகாரின் பேரில் கேரள காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
திருவனந்தபுரம்,

மலையாள சினிமாவில் புகழ் பெற்ற நடிகை மஞ்சு வாரியர். இவர் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி ஆவார். தனுஷ் நடித்துள்ள அசுரன் படித்தில் நடித்து உள்ளார். மஞ்சுவாரியர் மலையாள சினிமா தயாரிப்பாளரும், இயக்குநருமான ஸ்ரீகுமார் மேனன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். மஞ்சுவாரியரின்  தொழில் பங்குதாரராகவும் ஸ்ரீகுமார் மேனன் இருந்து உள்ளார்.

மஞ்சுவாரியர் புகாரில்,  தனது உயிருக்கு  ஆபத்து மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் நிதி பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்புவதாக கூறி உள்ளார்.

 திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டின் பல்வேறு கட்டங்களில் இயக்குனர் தன்னை வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்ததாக நடிகை குற்றம் சாட்டியுள்ளார்.  ஸ்ரீகுமார் மேனனின் நடத்தை தீவிர மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

குற்றச்சாட்டுகளின் கடுமையான தன்மையைக் கருத்தில் கொண்டு போலீஸ் டிஜிபி  லோக்நாத் பெஹெரா,  உயர் அதிகாரி ஒருவரிடம்  விசாரணை ஒப்படைக்கக்கூடும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மொபைல்போன் உரையாடலின் ஒரு ஆடியோ கிளிப்பிங்கையும்  ஆதாரமாக மஞ்சுவாரியர் சமர்ப்பித்து உள்ளார்.

தொழில்துறையில் பணியமர்த்தல் மற்றும் ஊதிய பாகுபாடு மற்றும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட தொழில்துறையில் கூறப்படும் பாலின துன்புறுத்தல்களை எதிர்த்துப் போராட  2017 ஆம் ஆண்டில் மலையாள சினிமா பெண்கள் அமைப்பு ஒன்றை மஞ்சுவாரியர் ஏற்படுத்தினார்.

குற்றச்சாட்டுக்கு உள்ளான ஸ்ரீகுமார் மேனன் சமீபத்தில்  மோகன்லால்- மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான ஓடியன் படத்தை இயக்கி உள்ளார்.

இதற்கிடையில்,  ஸ்ரீகுமார் மேனன் தனது பேஸ்புக் பக்கத்தின் மூலம், மஞ்சு வாரியர் புகாருக்கு பதில் அளித்து உள்ளார்.

தனது பேஸ்புக் பதிவில், "நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள சினிமாவுக்கு திரும்பியபோது மஞ்சு வாரியர் கிடைத்த எல்லா உதவிகளையும் மறந்து விட்டார்.. "நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது உங்கள் வங்கி கணக்கில் ரூ.1,500 மட்டுமே இருப்பதாக நீங்கள் என்னிடம் கூறியிருந்தீர்கள். எங்கள் முதல் விளம்பரத்தின் முன் பணமாக  நான் உங்களுக்கு ரூ.25 லட்சம் காசோலையை வழங்கியபோது, கடவுள் உங்களுக்கு அனுப்பிய தூதர் நான் என்று நீங்கள் அழுதீர்கள்.

உங்களால் பல முக்கிய நபர்கள் என் எதிரிகளாக  மாறினர்.  நான் ஊடக அறிக்கைகள் மூலமாக மட்டுமே போலீஸில் அளித்த புகார் குறித்து  அறிந்து கொண்டேன். விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன்" என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட்
வரி ஏய்ப்பு வழக்கில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன்;தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் பயமுறுத்தும் நடிகை ஸ்ரீரெட்டி
மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் என நடிகை ஸ்ரீரெட்டி கூறி உள்ளார்.
3. ‘மாமங்கத்தில்’ வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மம்மூட்டி
‘மாமங்கத்தில்’ நடித்துள்ள மம்மூட்டியின் தோற்றம் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது.
4. ட்விட்டர் தளத்திலிருந்து விலகியது ஏன்? - நடிகை குஷ்பு விளக்கம்
நன்மைகளை விட தீமைகள்தான் நிறைய இருக்கு என ட்விட்டர் தளத்திலிருந்து விலகியது குறித்து நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
5. ஆண்டி என அழைத்ததால் 4 வயது குழந்தையை மோசமான வார்த்தையால் திட்டிய நடிகை
ஆண்டி என அழைத்ததால் 4 வயது குழந்தையை பாலிவுட் நடிகை ஒருவர் மோசமான வார்த்தையால் திட்டி உள்ளார்.