சினிமா செய்திகள்

தயாரிப்பாளராக இருந்து வில்லனாக மாறியஆர்.கே.சுரேஷ் 2 வேடங்களில் நடிக்கிறார் + "||" + RK Suresh plays 2 roles

தயாரிப்பாளராக இருந்து வில்லனாக மாறியஆர்.கே.சுரேஷ் 2 வேடங்களில் நடிக்கிறார்

தயாரிப்பாளராக இருந்து வில்லனாக மாறியஆர்.கே.சுரேஷ் 2 வேடங்களில் நடிக்கிறார்
‘கைலாசகிரி’ படத்தில் ஆர்.கே.சுரேஷ் 2 வேடங்களில் நடிக்கிறார்.
தயாரிப்பாளராக இருந்து வில்லனாக மாறியவர், ஆர்.கே.சுரேஷ். இவர் அடுத்து நடிக்கும் ‘கைலாசகிரி’ படத்தில், 2 வேடங்களில் நடிக்கிறார். இவருடன் மதுபாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வசனம்-பாடல்களை சாய்மோகன் குமார் எழுத, தெலுங்கில் 18 வெற்றி படங்களை இயக்கிய தோட்ட கிருஷ்ணா கதை-திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ராவூரி வெங்கடசாமி தயாரித்து வருகிறார். ‘கைலாசகிரி’ படத்தை பற்றி டைரக்டர் தோட்ட கிருஷ்ணா கூறியதாவது:-

“ஆயிரம் வருடங்கள் பழமை யானதும், அதிக சக்தி கொண் டதுமான ஒரு மரகதலிங்கத்தை கோவிலுக்குள் புகுந்து ஒரு கும்பல் திருட முயற்சிக்கிறது. அதை தடுத்து லிங்கத்தை காப்பாற்ற முயற்சிக்கிறார், ஒரு இளைஞர். திருட்டு கும்பலின் முயற்சியை அந்த இளைஞர் எப்படி முறியடிக்கிறார்? சிவனின் சக்தி எவ்வாறு வெளிப்படுகிறது? என்பதை ‘கிராபிக்ஸ்’ மூலம் சிறப்பாக படமாக்கி இருக்கிறோம்.

அதிரடி சண்டை காட்சிகள், காதல், பக்தி என அனைத்தும் படத்தில் இடம் பெறுகிறது. திருப்பதி, ஐதராபாத், காணிப்பாக்கம் சிவன் கோவில் ஆகிய இடங் களில் படம் வளர்ந்துள்ளது. படத்தை அடுத்த மாதம் (நவம்பர்) திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்.”