சினிமா செய்திகள்

சென்னையில் நடந்தஉண்மை சம்பவம் படமானது + "||" + The film was a real incident in Chennai

சென்னையில் நடந்தஉண்மை சம்பவம் படமானது

சென்னையில் நடந்தஉண்மை சம்பவம் படமானது
சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவம், ‘எதிர்வினையாற்று’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது.
2 வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவம், ‘எதிர்வினையாற்று’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. இதில் கதாநாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகி தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் படத்தை தயாரித்தும் இருக்கிறார். இவர் முதுநிலை பட்டம் பெற்ற அவசர சிகிச்சை மருத்துவர் ஆவார். கதாநாயகியாக சனம் ஷெட்டி நடித்துள்ளார்.

ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், லட்சுமி பிரியா, சம்பத்ராம், அனுபமா குமார், மதன், விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கதாநாயகன் அலெக்சும், இளமைதாசும் இயக்கி உள்ளனர். படம் பற்றி அவர்கள் சொல்கிறார்கள்:-

“உண்மை சம்பவத்தை சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியோடு படமாக்கி இருக்கிறோம். எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு பெண்ணை காப்பாற்று கிறான்.

அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும், அவனை பின்தொடர்கின்றன. இதனால் அசாதாரணமான சூழ்நிலைக்கு தள்ளப்படு கிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வரு கிறான்? என்பது கதை. ஒரு இரவில் தொடங்கி மறுநாள் இரவுக்குள் 24 மணிநேரத்தில் நடக்கும் சம்பங்களை விறுவிறுப்பான திரைக்கதையாக படமாக்கி உள்ளோம். இது, திகில் படமாக தயாராகி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...