சினிமா செய்திகள்

புதிய களம்-புதிய ஸ்டைலில்விஜய் படத்தில், 2 கதாநாயகிகள் + "||" + In the movie Vijay, 2 heroines

புதிய களம்-புதிய ஸ்டைலில்விஜய் படத்தில், 2 கதாநாயகிகள்

புதிய களம்-புதிய ஸ்டைலில்விஜய் படத்தில், 2 கதாநாயகிகள்
விஜய்யின் 64-வது படத்தில் அவருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
விஜய் நடித்து தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கும் ‘பிகில்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார். ஆனந்தராஜ், விவேக், கதிர், ஜாக்கிஷராப், டேனியல் பாலாஜி, மனோபாலா, யோகிபாபு ஆகியோருடன் விஜய்யின் நண்பர்கள் ஸ்ரீமன், சஞ்சய், ஸ்ரீநாத் ஆகிய 3 பேரும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். அட்லீ டைரக்டு செய்ய, ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. படம், வருகிற வெள்ளிக்கிழமையே திரைக்கு வந்து விடும்.

இதைத்தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது, விஜய்யின் 64-வது படம். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. விஜய் ஜோடியாக ராஷிகன்னா, மாளவிகா மோகனன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

விஜய் இதுவரை நடித்திராத கதை மற்றும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புதிய களம், புதிய ஸ்டைலில் படம் உருவாகிறது. படப்பிடிப்பு சென்னையிலும், சுற்றுவட்டாரங்களிலும் நடைபெறுகிறது. படப்பிடிப்பை மிக ரகசியமாக நடத்தினாலும் கூட, அது பற்றிய தகவல்கள் வெளியே கசிந்து விடுவதால், படக்குழுவினர் 500 பேர்களுக்கு அடையாள அட்டைகள் கொடுத்து இருக்கிறார்கள். அதில், ‘விஜய்-64’ என்று எழுதப்பட்டுள்ளது.