சினிமா செய்திகள்

இந்தியில் தயாராகும் ‘ஆடை’ அமலாபால் வேடத்தில் கங்கனா? + "||" + Aadai movie ready in Hindi Kangana in the role of Amalapual

இந்தியில் தயாராகும் ‘ஆடை’ அமலாபால் வேடத்தில் கங்கனா?

இந்தியில் தயாராகும் ‘ஆடை’ அமலாபால் வேடத்தில் கங்கனா?
அமலாபால் நடித்து கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்த ஆடை படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அதிகமான காட்சிகளில் ஆடையில்லாமல் நிர்வாணமாகவே அமலாபால் துணிச்சலாக நடித்து இருந்தார். படத்தின் முதல் தோற்றம் வெளியானபோதே பரபரப்பு ஏற்பட்டது. எதிர்ப்புகளும் கிளம்பின.
அமலாபால் நடித்த  "ஆடை"  படம் திரைக்கு வந்த பிறகு வரவேற்பு கிடைத்தது. அமலாபால் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. இந்த படத்தை ரத்னகுமார் இயக்கி இருந்தார். ஆடை படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபல தயாரிப்பாளர் மகேஷ்பட் வாங்கி உள்ளார். இந்தியில் அமலாபால் கதாபாத்திரத்தில் நடிக்க கங்கனா ரணாவத்திடம் பேசுகின்றனர். இந்தி ஆடை படத்தையும் ரத்னகுமாரே இயக்குவார் என்று தெரிகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “ஆடை படம் பெரிய வரவேற்பை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை மகேஷ்பட் வாங்கி இருக்கிறார். அமலாபால் வேடத்துக்கு கங்கனா ரணாவத் பொருத்தமாக இருப்பார் என்று ஆடை தயாரிப்பாளரிடம் ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன்.


இந்தி ஆடை படத்தை எடுத்தால் நான்தான் இயக்குவேன் என்றும் நான் மறுத்தால் மட்டுமே வேறு இயக்குனரை வைத்து இயக்கலாம் என்றும் ஒப்பந்தம் உள்ளது. நான் தற்போது வேறு சில படவேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்” என்றார்.