சினிமா செய்திகள்

பார்வையற்ற சிறுவன் திருமூர்த்தி டி.இமான் இசையில் பாடினார் + "||" + The blind boy Thirumurthy also sang in the music of Iman

பார்வையற்ற சிறுவன் திருமூர்த்தி டி.இமான் இசையில் பாடினார்

பார்வையற்ற சிறுவன் திருமூர்த்தி டி.இமான் இசையில் பாடினார்
டி.இமான் இசையில் பார்வையற்ற சிறுவன் திருமூர்த்தி பாடியுள்ளார்.
சென்னை,

திறமை இருப்பவர்கள் எங்கிருந்தாலும் வரவேற்கப்பட வேண்டியவர்கள்.  திறமை எங்கிருந்தாலும் அதை பாராட்டவும், உலகத்திற்கு வெளிக்கொணரவும் வேண்டியது ஒவ்வொருவரின் கடமை! 

சமீபத்தில் பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கரின் பிரபல பாடலான 'ஏக் பியார் கா நக்மாஅ ஹேய்' என்ற பாடலை ரெயில்வே நடைமேடையில் ராகமாக பாடிக்கொண்டிருந்த ரேணு மண்டல் சினிமாவில் பாட வாய்ப்ப்பு பெற்றார்.

அதே போல்  கிருஷ்ணகிரியை சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வையற்ற சிறுவன் விஸ்வாசம் படத்தில் வரும் 'கண்ணான கண்ணே' பாடலை பாடிய வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியாகி இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டது. 

இதை பார்த்த இசையமைப்பாளர் டி.இமான் அந்த சிறுவன் யார் என்ற தகவலை கேட்டறிந்து விரைவிலேயே அவரை திரைப்படத்தில் பாட வைக்க உள்ளதாக உறுதியளித்துள்ளார்.

தற்போது அவர் சொன்னதை செய்து காட்டியுள்ளார். ஜீவா நடிப்பில் உருவாகி வரும் 'சீறு' படத்திற்கு இசையமைத்து வருகிறார் டி இமான். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை பாடியுள்ளார் திருமூர்த்தி. 

பார்வதி எழுதிய வரிகளுக்கு திருமூர்த்தி குரல் கொடுத்துள்ளார். இந்த செய்தியை இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐதராபாத்தில் 4 பேர் என்கவுண்ட்டர்: சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?
ஐதராபாத்தில் 4 பேர் என்கவுண்ட்டர் குறித்து சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
2. சகோதரியின் புத்தக வெளியீட்டு விழாவில் மேடையில் கண்ணீர் விட்ட பிரபல நடிகை
சகோதரி ஷாகீன் பட்டின் புத்தகம் குறித்து பேசும்போது பிரபல நடிகை ஆலியா பட் கண்ணீர் விட்டார்.
3. சிக்கென்ற உடல் ... கிக்கான போஸ்... 47 வயதில் வாய்ப்பு தேடும் நடிகை
சிக்கென்ற உடல் ... கிக்கான போஸ்... என 47 வயதில் நடிகை மந்த்ரா பேடி வாய்ப்பு தேடி வருகிறார்.
4. ’சுசி லீக்ஸ்’ போல் ’சுசி குக்’ யூடியூப் சேனல் ஆரம்பிக்கும் சுசித்ரா
பாடகி சுசித்ரா சுசி குக் யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறார்.
5. மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று சினிமா படத்தில் நடிக்கும் டாப்சி பன்னு
கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று சினிமா படத்தில் நடிகை டாப்சி பன்னு நடிக்கிறார்.