சினிமா செய்திகள்

தோல்வி படத்துக்கு பின் வெற்றி - நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி + "||" + Success after the flop - Actor Sivakarthikeyan is happy

தோல்வி படத்துக்கு பின் வெற்றி - நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி

தோல்வி படத்துக்கு பின் வெற்றி - நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி
தோல்வி படத்துக்கு பின் தான் நடித்த படம் வெற்றியடைந்துள்ளதால், நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்து இருந்தனர். பாண்டிராஜ் இயக்கினார். முந்தைய ‘மிஸ்டர் லோக்கல்’ படம் தோல்வி அடைந்த வருத்தத்தில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு இந்த வெற்றி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதற்காக டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். நம்ம வீட்டு பிள்ளையை வெற்றிப் படமாக்கிய ரசிகர்கள், தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அடுத்து விஷாலின் இரும்புத்திரை படத்தை எடுத்து பிரபலமான பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீ ரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

இதில் நடிக்கும் சிவகார்த்திகேயன் தோற்றம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இது அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தில் ஒரு பாடலையும் சிவகார்த்திகேயன் எழுதி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி; சாம் பில்லிங்ஸ் சதம் ‘வீண்’
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
2. ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
3. ‘பட்லர், வோக்ஸ் அதிரடியாக விளையாடி வெற்றி வாய்ப்பை பறித்து விட்டனர்’ - பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தங்களது அணியின் வெற்றி வாய்ப்பை பட்லரும், வோக்சும் அதிரடியாக விளையாடி தட்டிப்பறித்து விட்டதாக பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி கூறியுள்ளார்.
4. இலங்கை நாடாளுமன்ற தேர்தல்; ராஜபக்சே கட்சி சூப்பர் மெஜாரிட்டி வெற்றி பெற்றது
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சே கட்சி 3ல் 2 பங்கு இடங்களை கைப்பற்றி சூப்பர் மெஜாரிட்டி வெற்றி பெற்றுள்ளது.
5. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி: சீனாவுக்கு வடகொரிய அதிபர் பாராட்டு
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுள்ள சீனாவுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டு தெரிவித்துள்ளார்.