சினிமா செய்திகள்

காதலன் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் + "||" + With lover Vignesh Shiva Actress Nayanthara Sami Darshan at Tirupati Temple

காதலன் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்

காதலன் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி,

திருப்பதி கோவிலில் நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார். இருவருக்கும் இந்த ஆண்டின் இறுதியில் திருமண நிச்சயதார்த்தம்  நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்,  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று வழிபாடு நடத்தினர். அவர்களுக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள்  பிரசாதங்களை வழங்கினர்.

வேத பண்டிதர்களின் ஆசிர்வாதத்திற்குப் பின் கோவிலுக்கு வெளியே வந்த  நயன்தாராவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்களுடன் நயன்தாரா செல்பி எடுத்துக் கொண்டார். இதை அடுத்து காரில் புறப்பட்டுச் சென்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. தியேட்டர் திறப்பு தள்ளிவைப்பு; நயன்தாராவின் பக்தி படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?
நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது
2. நயன்தாரவுக்கு கொரோனா பாதிப்பா...? விக்னேஷ் சிவன் கோபம்
கொரோனா வதந்தி பரப்பியவர்களுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
3. குஷ்புவுக்கு கோவில் கட்டியது போல் நயன்தாராவை ‘கடவுள்’ ஆக்கிய ரசிகர்கள்!
குஷ்புவுக்கு கோவில் கட்டியது போல, நடிகை நயன்தாராவை அவரது ரசிகர்கள் சிலர் கடவுளாக வணங்கி வருகிறார்கள்.
4. திருப்பதி கோவிலில் 11-ந் தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி: இ-பாஸ் கட்டாயம்; மொட்டை போட முடியாது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 11-ந் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் மொட்டை போட முடியாது.
5. பிரபுதேவா படத்தில் நயன்தாரா?
பிரபுதேவா படத்தில் நயன்தாரா நடிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...