சினிமா செய்திகள்

‘உல்லாசம்’ ரீமேக்கில் விக்ரம் பிரபு? + "||" + In Ullasam movie remake actor Vikram birabu

‘உல்லாசம்’ ரீமேக்கில் விக்ரம் பிரபு?

‘உல்லாசம்’ ரீமேக்கில் விக்ரம் பிரபு?
தமிழ் பட உலகின் வளரும் இளம் நடிகரான விக்ரம் பிரபு வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்.
அவரது நடிப்பில் கடந்த வருடம் பக்கா, 60 வயது மாநிறம், துப்பாக்கி முனை ஆகிய படங்கள் வந்தன. தற்போது அசுர குரு, வானம் கொட்டட்டும் ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார்.

அசுர குரு படத்தில் மகிமா நம்பியாரும், வானம் கொட்டட்டும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டின் ஆகியோரும் ஜோடிகளாக நடிக்கிறார்கள். இந்த படங்களுக்கு பிறகு ஜே.டி. ஜெர்ரி இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் அதிரடி திகில் படமாக இது தயாராகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


இந்த படத்தில் பிரபல மலையாள நடிகரும் மம்முட்டியின் மகனுமான துல்கர் சல்மானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இருவரும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம், அஜித் குமார் இணைந்து நடித்து 1997-ல் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற உல்லாசம் படத்தின் ரீமேக்காக இந்த படம் தயாராகிறது என்றும் கூறப்படுகிறது.

இதில் விக்ரம் வேடத்தில் விக்ரம் பிரபுவும் அஜித்குமார் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானும் நடிப்பதாக பேசப்படுகிறது. ஆனாலும் உல்லாசம் ரீமேக்கா அல்லது வேறு புதிய கதையா? என்பதை படக் குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.