நடிகர் விஜய்யின் பிகில் படம் எப்படி உள்ளது?


நடிகர் விஜய்யின் பிகில் படம் எப்படி உள்ளது?
x
தினத்தந்தி 25 Oct 2019 7:44 AM GMT (Updated: 25 Oct 2019 7:44 AM GMT)

பிகில் படத்தில் ராயப்பன் கேரக்டர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை,

விஜய் நடித்து, அட்லி இயக்கிய 'பிகில்' திரைப்படம் இன்று (அக்.25) வெளியானது. இத்திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு நேற்று அனுமதி அளித்தது. இத்திரைப்படம் இன்று அதிகாலை 4 மணி முதலே தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அதிகாலை முதல் திரையரங்கில் காத்திருந்து படம் பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிகில் படம் குறித்து ட்விட்டரில் கலவையான விமர்சனங்கள் பதிவிட்டு வரப்படுகின்றன.

பிகில் படத்தில் ராயப்பன் கேரக்டர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் கேரியரில் இந்த கேரக்டர் தான் பெஸ்ட் என அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

பிகில் படம் பார்த்த விஜய் ரசிகர்கள் விஜய் - அட்லி வெற்றிப்பயணத்தில் இந்த படமும் ஒன்று என்று தெரிவித்து வருகின்றனர். ஆக்‌ஷன், காமெடி என விஜய் நடிப்பில் வெளுத்து வாங்கி உள்ள நிலையில் படத்தில் ராயப்பன் கேரக்டர் அனைவரும் நெஞ்சிலும் குடி கொண்டுள்ளது.

செண்டிமென்ட், ஆக்‌ஷன், ரொமான்ஸ் போன்ற கமர்ஷியல் அம்சங்களுக்கும் படத்தில் பஞ்சமில்லை. 

படத்தில் டிரெய்லர் வெளியானதிலிருந்தே ராயப்பன் கேரக்டரில் வரும் விஜய் சொல்லும் பிகிலு என்ற வாசனம் பட்டித்தொட்டி முழுவதும் சென்றடைந்தது. சென்டிமென்ட், ஆக்‌ஷன் என ராயப்பன் கேரக்டரில் விஜய்  வேற லெவலில் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என ரசிகர்கள் புகழாரம் தெரிவித்து வருகின்றனர்.

ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரு கதாபாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் உடல் மொழி, நடை என வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார் விஜய். ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கும் விஜய், செண்டிமென்ட் காட்சிகளில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தடம் பதிக்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு முன்னர் ரெயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சண்டை காட்சி வேற லெவல்.

தந்தை ராயப்பன் கதாபாத்திரம் 4 சீன் வந்தாலும் நச்சுனு இருக்கு.

ராயபுரத்தையே தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ராயப்பனின் (தந்தை விஜய்) மகன் தான் பிகில் (மகன்). அப்பகுதி மக்களுக்கு இடையூறாக பல்வேறு வேலைகளை செய்யும் டேனியல் பாலாஜியின் தந்தையை ராயப்பன் தட்டிக்கேட்கிறார். இதனால் இருவருக்கும் பகை உண்டாகிறது. ராயப்பனை கொல்ல சதித்திட்டம் தீட்டி வருகிறார் டேனியல் பாலாஜியின் தந்தை. தன்னைப்போல் தனது மகனும் ரவுடி ஆகிவிடக்கூடாது என என்னும் ராயப்பன், பிகிலை கால்பந்தாட்ட வீரனாக மாற்ற வேண்டும் என தீர்க்கமாக உள்ளார். 

இந்த விளையாட்டால் தான் நம் அடையாளங்கள் மாறும் என மகனுக்கு அட்வைஸ் கொடுக்கிறார். கால்பந்தாட்டத்தில் கவனம் செலுத்தி படிப்படியாக முன்னேறும் பிகிலுக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. இதற்காக அவர் டெல்லி புறப்படும் வேளையில், ராயப்பனை டேனியல் பாலாஜியின் தந்தை கொன்றுவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பிகில், டேனியல் பாலாஜியின் தந்தையை கொன்றுவிடுகிறார். தந்தை இறந்ததால், ராயபுரம் மக்களை பாதுகாக்க வேண்டும் என பிகில் முடிவெடுக்கிறார்.  இதனால் பிகில் கால்பந்து விளையாட முடியாமல் போகிறது. பின்னர் மைக்கேலாக வாழ்ந்து வருகிறார். 

படத்திற்கு மிகப்பெரிய பலம் ஏ.ஆர். ரகுமான். அவரது பாடல்கள் ஏற்கனவே ஹிட்டான நிலையில், பின்னணி இசை மூலம் மிரட்டி இருக்கிறார். குறிப்பாக விஜய் வரும் காட்சிகளில் சும்மா தியேட்டரை அதிர வைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணுவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

Next Story