‘கருத்துகளை பதிவு செய்’ படத்துக்கு தணிக்கை குழுவினர் பாராட்டு


‘கருத்துகளை பதிவு செய்’ படத்துக்கு தணிக்கை குழுவினர் பாராட்டு
x
தினத்தந்தி 25 Oct 2019 12:25 PM GMT (Updated: 25 Oct 2019 12:25 PM GMT)

சமூக வலைதளங்கள் மூலம் உருவாகும் பிரச்சினையை கருவாக வைத்து, ‘கருத்துகளை பதிவு செய்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.

‘கருத்துகளை பதிவு செய்’ படத்தை பற்றி டைரக்டர் ராகுல் பரமஹம்சா கூறியதாவது:-

‘‘சமூக வலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள்? என்பது பற்றியும் ‘கருத்துகளை பதிவு செய்’ படத்தின் திரைக்கதையை அமைத்து இருக்கிறோம்.

இந்த பிரச்சினையில் மாட்டிக்கொண்ட ஒரு அப்பாவி பெண் அதில் இருந்து எப்படி தப்பிக்கிறார்? அந்த நயவஞ்சக கும்பல்களை என்ன செய்கிறார்? என்பதே படத்தின் கதை. தணிக்கைக்காக இந்த படம் கடந்த வாரம் அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு தலைமை அதிகாரி, ‘‘இம்மாதிரி படங்கள் இந்தக்கால தலைமுறைக்கு அவசியம் என்று பாராட்டி, ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்தார்கள்.

சமீபகால பிரச்சினைகளை தாங்கி வரும் இந்த படத்தின் இணை தயாரிப்பு: ஜே.எஸ்.கே.கோபி. கணேஷ் ராகவேந்திரா இசையமைக்க, பரணி பின்னணி இசையமைக் கிறார். படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் அனைத்தும் முடிவடைந்தது. படம் அடுத்த மாதம் (நவம்பர்) திரைக்கு வர இருக்கிறது.’’

Next Story