சினிமா செய்திகள்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார் + "||" + prakash raj trolled for his controversial remark on ramleela

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார்
மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி: 

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது டெல்லி திலக் மார்க்  போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசி வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம்லீலா குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

தனியார் சேனல் ஒன்றில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், ராம்லீலா குறித்து பேசும்போது அதனை குழந்தை ஆபாசத்துடன் ஒப்பிட்டு பேசியதாகவும் ராம்லீலா  சிறுபான்மையினரிடையே அச்சத்தை பரப்புகிறது என்று கூறியதாகவும்  சர்ச்சையை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து  நடிகர் பிரகாஷ் ராஜ் மீது  போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.