சினிமா செய்திகள்

சிவா டைரக்‌ஷனில் புதிய படம்ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க 2 கதாநாயகிகள் கடும் போட்டி! + "||" + 2 heroines fierce competition to pair with Rajinikanth

சிவா டைரக்‌ஷனில் புதிய படம்ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க 2 கதாநாயகிகள் கடும் போட்டி!

சிவா டைரக்‌ஷனில் புதிய படம்ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க 2 கதாநாயகிகள் கடும் போட்டி!
ரஜினிகாந்த் நடிக்கும் 168-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க 2 பிரபல கதாநாயகிகள் போட்டி போடுகிறார்கள்.
ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாக அடுத்தடுத்து புதிய படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார். ‘கபாலி,’ ‘காலா,’ ‘பேட்ட,’ ‘தர்பார்’ ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். ‘தர்பார்’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்து வருகிறார். இந்த படம் வருகிற பொங்கல் விருந்தாக திரைக்கு வரும்.

படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்ட நிலையில், தற்போது இறுதி கட்ட பணிகள் நடை பெறுகின்றன. இது, ரஜினிகாந்தின் 167-வது படம்.

இந்த படத்தை அடுத்து ரஜினிகாந்த் புதிய படத்துக்கு தயாராகி வருகிறார். இது, அவர் நடிக்கும் 168-வது படம். அஜித்குமாரை வைத்து ‘வீரம்,’ ‘விவேகம்,’ `வேதாளம்,' ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களை இயக்கிய சிவா டைரக்டு செய்கிறார். மிக முக்கியமான படங்களில் நடிப்பதற்கு முன்பு ரஜினிகாந்த் இமயமலை செல்வது வழக்கம். அதன்படி அவர் சமீபத்தில் இமயமலை சென்று வந்தார்.

சிவா டைரக்‌ஷனில் அவர் நடிக்கும் 168-வது படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படப்பிடிப்பு அடுத்த மாதம் (நவம்பர்) தொடங்க இருக்கிறது. ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க 2 பிரபல கதாநாயகிகள் போட்டி போடுகிறார்கள்.

இதற்கிடையில், ஜோதிகா அல்லது கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. ஜோதிகா, ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்காவிட்டாலும், அந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்தார். கீர்த்தி சுரேஷ் இதுவரை இளம் கதாநாயகர்களின் ஜோடியாகவே நடித்து இருக்கிறார். அவர் இந்த படத்தில் ஒப்பந்தமானால், ரஜினிகாந்துடன் அவர் நடிக்கும் முதல் படமாக இருக்கும்.