சினிமா செய்திகள்

“எனக்கு தமிழ் படங்கள் பிடிக்கும்” - சல்மான்கான் + "||" + “I like Tamil films” - Salman Khan

“எனக்கு தமிழ் படங்கள் பிடிக்கும்” - சல்மான்கான்

“எனக்கு தமிழ் படங்கள் பிடிக்கும்” - சல்மான்கான்
பிரபுதேவா இந்தி பட உலகில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார்.
பிரபுதேவா இந்தி பட உலகில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார். இவரது இயக்கத்தில் ஏற்கனவே திரைக்கு வந்த சல்மான்கானின் வாண்டட், அக்‌ஷய்குமாரின் ரவுடி ரத்தோர், அஜய்தேவ்கானின் ஆக்‌ஷன் ஜாக்‌ஷன் உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. தற்போது சல்மான்கான் நடித்துள்ள தபாங்-3 படத்தை டைரக்டு செய்துள்ளார்.

இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதையொட்டி சல்மான்கானும் பிரபுதேவாவும் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது சல்மான்கான் கூறியதாவது:-

“தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம் படங்களை விரும்பி பார்ப்பேன். வட இந்தியாவில் தென்னிந்திய படங்கள் அதிக வசூல் குவிக்கின்றன. பாகுபலி, கே.ஜி.எப் போன்ற படங்கள் பெரிய வசூல் ஈட்டியது. தமிழில் விஜய் நடித்த போக்கிரி படத்தை இந்தியில் ரீமேக் செய்து நடித்தேன். அவர் நடிப்பில் வந்த தெறி, திருப்பாச்சி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்போது நான் நடித்துள்ள தபாங்-3 எனக்கு முக்கிய படம். இது தென்னிந்திய படம் போலவே இருக்கும். இந்த படத்தில் தென்னிந்திய கலைஞர்கள் அதிகமானோர் வேலை செய்துள்ளனர்.

பிரபுதேவா இந்த படத்தை இயக்கி இருப்பது வெற்றிக்கு உறுதி அளிப்பதுபோல் அமைந்துள்ளது. எனது அடுத்த படத்தையும் அவர்தான் இயக்குகிறார்.”

இவ்வாறு சல்மான்கான் கூறினார்.