படமாகும் ‘மகாபாரதம்’ திரவுபதி வேடத்தில் தீபிகா படுகோனே


படமாகும் ‘மகாபாரதம்’ திரவுபதி வேடத்தில் தீபிகா படுகோனே
x
தினத்தந்தி 25 Oct 2019 11:15 PM GMT (Updated: 25 Oct 2019 8:36 PM GMT)

இதிகாசமான மகாபாரதம் ரூ.1000 கோடி செலவில் சினிமா படமாக தயாராகிறது.

திகாசமான மகாபாரதம் ரூ.1000 கோடி செலவில் சினிமா படமாக தயாராகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் இந்த படம் உருவாகிறது. இதில் நடிப்பதற்கான நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. அமீர்கான் கிருஷ்ணராகவும் தெலுங்கு நடிகர் பிரபாஸ் பீமனாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.

அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் வருகிறார். தமிழ் நடிகர்களையும் அணுகி பேசி வருகிறார்கள். இந்த நிலையில் திரவுபதி வேடத்தில் தீபிகா படுகோனே நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தீபிகா படுகோனே ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார்.

ராம் லீலா, ஓம் சாந்தி ஓம், பாஜிரோ மஸ்தானி உள்ளிட்ட இந்தி வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை மணந்து திருமணத்துக்கு பிறகும் நடித்து வருகிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகும் சப்பாக் இந்தி படத்தில் திராவக வீச்சில் முகம் சிதைந்த பெண்ணாக வருகிறார்.

தற்போது மகாபாரத கதையின் முக்கிய கதாபாத்திரமான திரவுபதி வேடத்தையும் ஏற்க உள்ளார். இதில் நடிப்பது குறித்து தீபிகா படுகோனே கூறும்போது, “இதிகாசமான மகாபாரதத்தில் நிறைய வாழ்வியல் கதைகள் உள்ளன. அதில் திரவுபதி வேடத்தில் நடிப்பது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இது எனது திரையுலக வாழ்க்கையில் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

Next Story