சினிமா செய்திகள்

"என்னால் இன்றளவும் நான் ஒரு நடிகன் என்பதை நம்பமுடியவில்லை" - நடிகர் ஷாருக்கான் + "||" + myself today   I can’t believe I’m an actor The actor is Shah Rukh Khan

"என்னால் இன்றளவும் நான் ஒரு நடிகன் என்பதை நம்பமுடியவில்லை" - நடிகர் ஷாருக்கான்

"என்னால் இன்றளவும் நான் ஒரு நடிகன் என்பதை நம்பமுடியவில்லை" - நடிகர் ஷாருக்கான்
என்னால் இன்றளவும் நான் ஒரு நடிகன் என்பதை நம்பமுடியவில்லை என நடிகர் ஷாருக்கான் கூறினார்.
புதுடெல்லி,

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். 1988 ஆம் ஆண்டில் பியூஜி என்ற தொலைக்காட்சி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1992-ல், ராஜ் கன்வார் இயக்கிய தீவானா மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஆரம்ப காலங்களில்  அவர் தனது அப்பாவி தோற்றம், மங்கலான புன்னகை மற்றும் நெகிழ்வான கூந்தலுக்காக நேசிக்கப்பட்டார்.

இருப்பினும், ஷாருக்கான் 1992 ஆம் ஆண்டு வெளியான  தனது ராஜு பான் கயா ஜென்டில்மேன் திரைப்படத்தின் ரஷ்ஸைப் பார்க்கும்போது தன்னை மிகவும் அசிங்கமாகக் இருப்பதாக உணர்ந்ததாக கூறி உள்ளார். 

டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் ஷாருக்கான் தனது நடிப்புலக வாழ்க்கை பற்றி கூறியதாவது:-

நான் மிகவும் அசிங்கமாக இருந்தேன். எனக்கு அத்தகைய மோசமான முடி இருந்தது. நானா படேகர், அமிர்தா சிங் மற்றும் ஜுஹி சாவ்லா ஆகியோருக்கு முன்னால் மோசமான நடிப்பை நான் நடித்து இருந்தேன் 

நானா படேகர், அம்ரிதா சிங், ஜுஹி சாவ்லா போன்ற நடிகர்கள் முன் நடிக்கும்போது மிகவும் பதட்டம் அடைந்தேன். படத்தில் நான் நடித்த காட்சிகளை பார்த்ததும், `என்னால் நடிகனாக முடியாது’ என்று தோன்றியது. படத்தின் இயக்குநர் என்னை சமாதானப்படுத்தினார். படத்தின் இறுதி வடிவம் நன்றாக இருக்கும் என்று ஆறுதல் கூறினார்.

"அது மோசமானதல்ல என்று  அஜீஸ் மற்றும் ஜுஹியும் என்னை நம்ப வைத்தார்கள்.  அஜீஸ், ஜுஹி `திரையரங்குகளில் வரவேற்பு பெறும்‘ என்றார்கள். அவர்கள் இருவரும் என்னிடம் பொய் சொன்னார்கள். நான் பார்ப்பதற்கு நன்றாக இல்லை. வழக்கம்போலத்தான் இருந்தேன். 

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. காரணம் மக்கள் என் மீது அளவுகடந்த அன்பை வைத்துள்ளனர். என்னால் இன்றளவும் நான் ஒரு நடிகன் என்பதை நம்பமுடியவில்லை. நான் ஒரு டெல்லி பையனாகவே உணருகிறேன்.

சில நேரங்களில் நான் ஒரு நடிகனாக நடந்துகொள்ள வேண்டியிருக்கும். இது சுவாரஸ்யமானதல்ல. ஆனால், என்னுடைய பணியை நான் விரும்புகிறேன்.

என் அம்மா காலமான பிறகு நான் டெல்லியில் இருந்து  மும்பைக்கு புறப்பட்டேன். அவர்களுடைய ஆசீர்வாதங்கள் என்னுடன் இருப்பதைப் போல உணர்கிறேன் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்
பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
2. எம்.ஜி.ஆர் தோற்றத்தில் அரவிந்த சாமி நடிக்கும் 'தலைவி' பட டீசர்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தலைவி படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
3. 'தலைவி' படத்தின் எம்.ஜி.ஆர். லுக் வெளியானது!
தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார்.
4. டிவி நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி ; தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
டிவி நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
5. உலக பாக்ஸ் ஆபீஸ் : ரஜினியின் தர்பார் 150 கோடி ரூபாய் வசூலித்து சாதனை...!
150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.