சினிமா செய்திகள்

பாகுபலி-2 சாதனையை முறியடித்த நடிகர் விஜய்யின் பிகில் வசூல்; 3 நாட்களில் ரூ.100 கோடி + "||" + Bigil box office collection: Vijay-starrer rips apart Baahubali 2 record

பாகுபலி-2 சாதனையை முறியடித்த நடிகர் விஜய்யின் பிகில் வசூல்; 3 நாட்களில் ரூ.100 கோடி

பாகுபலி-2 சாதனையை முறியடித்த நடிகர் விஜய்யின் பிகில் வசூல்; 3 நாட்களில் ரூ.100 கோடி
நடிகர் விஜய்யின் 'பிகில்' 3 நாட்களில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து பாகுபலி-2 சாதனையை முறியடித்துள்ளது.
சென்னை,

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் உலகளவில் மொத்த வசூலில் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.

மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. 180 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. பெரும் எதிர்பார்ப்பு நிலவியதால், அதிக விலை கொடுத்து இதன் வெளியீட்டு உரிமைகள் வாங்கப்பட்டு உள்ளன.

தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் சுமார் 83 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் படம் வெளியானது.

ஆனால், விமர்சன ரீதியாகக் கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியாகப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தீபாவளி விடுமுறை நாட்கள் என்பதால் முக்கிய திரையரங்குகள் அனைத்திலுமே ஹவுஸ்புல் காட்சிகளாகவே திரையிடப்பட்டு வருகின்றன.

உலகளவில் மொத்த வசூலில் சுமார் ரூ.100 கோடியைக் கடந்து சாதனை புரிந்துள்ளது 'பிகில்'. அமெரிக்காவில் இதுவரை 940K டாலர்கள் வசூல் செய்துள்ளது. இன்றைய வசூலின் மூலம் 1 மில்லியன் டாலரைத் தொடும் என்பது உறுதியாகிறது. இங்கிலாந்தில் 2.31 கோடி ரூபாயும், ஆஸ்திரேலியாவில் 1.59 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. சென்னையில் மட்டும் வெள்ளிக்கிழமை - ரூ.1.79 கோடி, சனிக்கிழமை - ரூ.1.73 கோடி, ஞாயிற்றுக்கிழமை - ரூ.1.74 கோடி என மொத்தமாக இதுவரை ரூ.5.26 கோடி வசூல் செய்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி-2ன் முதல் வார இறுதியில் இந்த படம் ரூ.3.24 கோடியை வசூலித்து இருந்தது. இருப்பினும், பிரபாஸ்  நடித்த இந்த  படம்  மொத்தம் ரூ.1799 கோடியை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் நடிப்பில் தெலுங்கில் வெளியான படங்களில் சாதனை புரிந்துள்ளது 'பிகில்'. மொத்தமாக ரூ.10.5 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் சில நாட்களில் இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றிய விநியோகஸ்தர்களுக்கு போட்ட பணம் திரும்ப வந்துவிடும். அடுத்த நாட்களில் வரும் வசூல் அனைத்தும் லாபமே. விஜய் படங்களுக்குத் தெலுங்கில் மட்டுமே மார்க்கெட் குறைவாக இருந்தது. இந்தப் படத்தின் மூலம் தெலுங்கிலும் வசூல் நடிகராக வலம்வரத் தொடங்கியுள்ளார் விஜய். கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் வசூல் சுமார் ரூ.10 கோடியைத் தாண்டியுள்ளது .

தமிழகத்தின் மொத்த வசூல் கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 60 கோடி ரூபாயைத் தாண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் எவ்வளவு தொகை என்பது தெரியவரும். மேற்கண்ட வசூல் கணக்குகளைக் கூட்டிப் பார்த்தால் உலகளவில் ரூ.100 கோடி வசூலை 'பிகில்' படம் கடந்துள்ளது உறுதியாகியுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை, படம் ரூ .30 கோடிக்கு மேல் வசூலித்து. மொத்தம் ரூ. 130 கோடியாக உள்ளது.

’துப்பாக்கி' படத்தின் வெற்றிக்குப் பிறகு அனைத்து மொழிகளிலுமே விஜய் படம் நல்லபடியாக வசூல் செய்து வருகிறது. 'புலி', 'ஜில்லா' மற்றும் 'தலைவா' ஆகிய படங்களைத் தவிர்த்து இதர விஜய் படங்கள் அனைத்துமே 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய படங்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

கார்த்தியின் 'கைதி'  நல்ல விமர்சனத்தை கொண்டு உள்ளதால் ஒரு நல்ல வசூலை கொண்டு வந்துள்ளது. குறைந்த தியேட்டர் என்பதால் சென்னையில் இந்த திரைப்படம் தொடக்க நாளில் ரூ.32 லட்சம் வசூலித்தது மற்றும் இரண்டாவது நாளில் ரூ.37 லட்சம் வசூலித்து. அதன் இரண்டு நாள் வசூலாக ரூ.69 லட்சத்தை வசூலித்து உள்ளது. மூன்று நாள் மொத்தம் ரூ.1.07 கோடி ரூபாயை வசூலித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்த் பிறந்தநாள் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி ட்விட்டரில் ரஜினி ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.
2. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது
இந்தியாவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன 10 ஹேஷ்டேக்குகளில் விஜய்யின் பிகில் இடம் பெற்றுள்ளது.
3. பகவதி அம்மன் கோயிலில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சாமி தரிசனம் ...!
கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்.
4. ஐதராபாத்தில் 4 பேர் என்கவுண்ட்டர்: சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?
ஐதராபாத்தில் 4 பேர் என்கவுண்ட்டர் குறித்து சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
5. சகோதரியின் புத்தக வெளியீட்டு விழாவில் மேடையில் கண்ணீர் விட்ட பிரபல நடிகை
சகோதரி ஷாகீன் பட்டின் புத்தகம் குறித்து பேசும்போது பிரபல நடிகை ஆலியா பட் கண்ணீர் விட்டார்.