சினிமா செய்திகள்

‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம் + "||" + New movie starring Bharathiraja

‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம்

‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம்
பாரதிராஜா தனது புதிய படத்துக்கு மீண்டும் ஒரு மரியாதை என்று பெயர் சூட்டி உள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா தற்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். பாண்டியநாடு, குரங்கு பொம்மை, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது ‘ராக்கி’ படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாரதிராஜா ‘ஓம்’ என்ற படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இதில் கதாநாயகியாக நட்சத்திரா நடித்துள்ளார். ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோரும் உள்ளனர். வாழ்க்கையில் அனைத்தையும் அனுபவித்துவிட்ட ஒரு முதியவருக்கும், இளம் பெண்ணுக்கும் இடையே நடைபெறும் சம்பவங்களே கதை.

பயணம் சார்ந்த படமாக தயாராகி உள்ளது. இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். இந்த படம் விரைவில் திரைக்கு வர தயாராகிறது. இந்த நிலையில் ஓம் தலைப்பை மாற்றி விட்டு ‘மீண்டும் ஒரு மரியாதை’ என்ற தலைப்பை படத்துக்கு பாரதிராஜா சூட்டி உள்ளார்.

ஏற்கனவே சிவாஜிகணேசன் நடித்த முதல் மரியாதை படத்தை பாரதிராஜா இயக்கி இருந்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது தனது புதிய படத்துக்கு மீண்டும் ஒரு மரியாதை என்ற பெயரை சூட்டி உள்ளார். இதுவும் முதல் மரியாதை போன்ற ஒரு காதல் படம் என்று தெரிகிறது.