சினிமா செய்திகள்

‘தர்பார்’ படத்தில் நடிக்கும்ரஜினிகாந்த் தோற்றம் வெளியானது + "||" + Darbar Rajinikanth Appearance Released

‘தர்பார்’ படத்தில் நடிக்கும்ரஜினிகாந்த் தோற்றம் வெளியானது

‘தர்பார்’ படத்தில் நடிக்கும்ரஜினிகாந்த் தோற்றம் வெளியானது
தீபாவளியை முன்னிட்டு தர்பார் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. டப்பிங், ரீ ரிக்கார்டிங், கிராபிக்ஸ் பணிகள் நடக்கின்றன. இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். மும்பையை கதைக்களமாக வைத்துள்ளனர். தாதாக்களுக்கும், ரஜினிகாந்துக்கும் நடக்கும் மோதலே கதை.

இதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். யோகிபாபு, பிரதீக், தலீப் தாஹில் ஆகியோரும் உள்ளனர். தர்பார் படத்தை அடுத்த வருடம் ஜனவரி பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். படத்தின் தீம் மியூசிக் அடுத்த மாதம் 7-ந் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு தர்பார் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் ரஜினிகாந்த் கையில் துப்பாக்கியுடன் கூலிங் கிளாஸ் அணிந்து கம்பீரமாக நிற்கிறார். எதிரிகளை பார்த்து சுடுவதுபோல் இந்த காட்சி உள்ளது. ரஜினியின் புதிய தோற்ற போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இளமை தோற்றத்தில் அவர் இருப்பதாகவும் அவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டு வருகிறார்கள். அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார். கிராமத்து கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதில் கதாநாயகியாக நடிக்க ஜோதிகா, மஞ்சு வாரியர் பெயர்கள் அடிபடுகின்றன. கீர்த்தி சுரேசையும் அணுகி இருப்பதாக கூறப்படுகிறது.