சினிமா செய்திகள்

‘ஓ மை கடவுளே’ படத்தில் கவுரவ வேடத்தில், விஜய் சேதுபதி + "||" + Vijay Sethupathi in guest role in 'Oh My God'

‘ஓ மை கடவுளே’ படத்தில் கவுரவ வேடத்தில், விஜய் சேதுபதி

‘ஓ மை கடவுளே’ படத்தில் கவுரவ வேடத்தில், விஜய் சேதுபதி
அசோக் செல்வன்-ரித்திகாசிங் ஜோடியாக நடிக்கும் படத்துக்கு, ‘ஓ மை கடவுளே’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
வாணி போஜன், சாரா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்கிறார். அஸ்வத் மாரிமுத்து டைரக்டு செய்து இருக்கிறார். படத்தை பற்றி அவர் சொல்கிறார்:-

“விஜய் சேதுபதி ஏற்றிருப்பது கவுரவ வேடம் என்பதை விட, படத்துக்கே கவுரவம் சேர்க்கும் முக்கிய வேடம் என்று கூறலாம். கதையை அடுத்த தளத்துக்கு எடுத்து செல்லும் கதாபாத்திரம், அது. இந்த படத்தின் திரைக் கதையை எழுதி முடித்தபோதே இயல்பாக நடிக்கக் கூடிய ஒரு பிரபல நடிகர் அந்த வேடத்தில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதினோம்.

இதற்காக விஜய் சேதுபதியை சந்தித்து கதையை சொன்னதும், நடிக்க சம்மதித்தார். அவர் திரையில் தோன்றும் நேரம் குறைவு என்றாலும், நிச்சயமாக ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பார். நகைச்சுவை கலந்த காதல் சித்திரம், இது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.

‘மேயாத மான்’ படத்துக்காக பல விருதுகளை பெற்ற ஜேம்ஸ் லியோன் இசையமைத்து இருக்கிறார். ஒளிப் பதிவு செய்திருப்பவர், விது அய்யனா. அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகிய இருவரும் டெல்லிபாபுவுடன் இணைந்து தயாரித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.”