சினிமா செய்திகள்

‘மாமாங்கம்’ படத்துக்காக தமிழில், மம்முட்டியே ‘டப்பிங்’ பேசினார் + "||" + Mammootty spoke in Tamil for a movie of the Mamangam

‘மாமாங்கம்’ படத்துக்காக தமிழில், மம்முட்டியே ‘டப்பிங்’ பேசினார்

‘மாமாங்கம்’ படத்துக்காக தமிழில், மம்முட்டியே ‘டப்பிங்’ பேசினார்
மம்முட்டி நடித்த ‘மாமாங்கம்’ என்ற புதிய படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் தயாராகி இருக்கிறது.
தமிழ் பதிப்பில் தனது கதாபாத்திரத்துக்காக அவரே ‘டப்பிங்’ பேசியிருக்கிறார். இந்த படத்தை பற்றிய தகவல்களை டைரக்டர் பத்மகுமார் பகிர்ந்து கொண்டார். அவர் சொல்கிறார்:-

“மம்முட்டி, மொழி எல்லைகளை கடந்த திறமையான நடிகர். இந்திய அளவில் மிக சிறந்த நடிகராக போற்றப்படுபவர். மலையாளத்தை போலவே தமிழிலும் பல வெற்றி படங்களை கொடுத்தவர். அவர் மலையாள வாசனையே இல்லாமல் தமிழில் ‘டப்பிங்’ பேசியதும், அவருடைய தமிழ் உச்சரிப்பும் ஆச்சரியப்படுத்தியது. அவருடைய தமிழ் உச்சரிப்பில் மண்ணின் மணம் இருந்தது. இதற்காக அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை எங்களை வெகுவாக ஆச்சரியப்படுத்தியது.

இந்த படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய 3 மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். 3 மொழிகளிலுமே நல்ல கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

திருவையாறில் நடக்கும் கலாசார விழாவை களமாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மன்னனின் அடக்குமுறைக்கு எதிராக போராடிய வீரனின் வரலாறை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

படத்தில் மலையாள நடிகர்கள் உன்னி முகுந்தன், சித்திக், மணிக்குட்டன், மணிகண்டன் ஆச்சாரி, தருண் அரோரா, கனிகா, அனுசித்தாரா, இனியா ஆகியோர் நடித்துள்ளனர். எம்.பத்மநாபன் இயக்கியிருக்கிறார். வேணு குணப்பிள்ளி தயாரித்துள்ளார்.” 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் மம்முட்டி, மோகன்லால் படங்கள் பாதிப்பு
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் மம்முட்டி, மோகன்லால் படங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.