சினிமா செய்திகள்

விஜய்யின் பிகில் முதல் வாரத்தில் வசூல் ரூ.200 கோடியாக தாண்டும்? + "||" + Vijay-starrer Bigil is unstoppable in its home territory

விஜய்யின் பிகில் முதல் வாரத்தில் வசூல் ரூ.200 கோடியாக தாண்டும்?

விஜய்யின் பிகில் முதல் வாரத்தில் வசூல் ரூ.200 கோடியாக தாண்டும்?
நடிகர் விஜய்யின் பிகில் முதல் வாரத்தில் வசூல் ரூ.200 கோடியாக தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் உலகளவில் மொத்த வசூலில் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது.

மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. 180 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் படம் வெளியானது.

ஆனால், விமர்சன ரீதியாகக் கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியாகப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தீபாவளி விடுமுறை நாட்கள் என்பதால் முக்கிய திரையரங்குகள் அனைத்திலுமே ஹவுஸ்புல் காட்சிகளாகவே திரையிடப்பட்டு வருகின்றன.

முதல் 3 நாட்களில் உலகளவில் மொத்த வசூலில் சுமார் ரூ.100 கோடியைக் கடந்து சாதனை புரிந்துள்ளது 'பிகில்'.

சுமார் 700 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.26.1 கோடியை வசூலித்துள்ளது, இது சர்காருக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய  முதல் நாள் வசூலாகும். சர்கார்  ரூ.31.5 கோடியை வசூலித்து இருந்தது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நல்ல வசூல் செய்துள்ளது. உலக அளவில் இதுவரை சுமார் 150 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளளது. இதன்  ‘தெறி’ படத்தின் மொத்த வசூலை,  ‘பிகில்’ படத்தின் 4 நாட்கள் மொத்த வசூல் தாண்டி உள்ளது.

உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில், விஜய் மற்றும் நயன்தாரா நடித்துள்ள பிகில்  ரூ.160 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, முதல் வாரத்தில்  ரூ.200 கோடியாக தாண்டும்  என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்
பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
2. எம்.ஜி.ஆர் தோற்றத்தில் அரவிந்த சாமி நடிக்கும் 'தலைவி' பட டீசர்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தலைவி படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
3. 'தலைவி' படத்தின் எம்.ஜி.ஆர். லுக் வெளியானது!
தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார்.
4. டிவி நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி ; தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
டிவி நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
5. உலக பாக்ஸ் ஆபீஸ் : ரஜினியின் தர்பார் 150 கோடி ரூபாய் வசூலித்து சாதனை...!
150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.