சினிமா செய்திகள்

நவம்பர் 13-ல் அர்ச்சனா திருமணம் + "||" + Archana married on 13 November

நவம்பர் 13-ல் அர்ச்சனா திருமணம்

நவம்பர் 13-ல் அர்ச்சனா திருமணம்
அர்ச்சனா -ஜெகதீஷ் திருமணம் நவம்பர் 13-ந் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் அகரம், வேகம், தமிழகம், கருப்பம்பட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளவர் புதுமுகம் அர்ச்சனா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் அர்ச்சனா நடித்த லயன், பல்பு உள்ளிட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்துள்ளன. முன்னணி தெலுங்கு நடிகர்கள் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தற்போது அகராதி என்ற தமிழ் படத்திலும், 3 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அர்ச்சனாவுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இருவருக்கும் சமீபத்தில் திருமண  நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண தேதியை முடிவு செய்யாமல் இருந்தனர்.

தற்போது அடுத்த மாதம் (நவம்பர்) 13-ந் தேதி அர்ச்சனா -ஜெகதீஷ் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்துக்கு பிறகு  சினிமாவை விட்டு விலக அர்ச்சனா முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.