சினிமா செய்திகள்

4 சண்டை காட்சிகளில் நந்திதா ‘டூப்’ இல்லாமல் நடித்தார் + "||" + Nandita appeared in 4 fight scenes without dupe

4 சண்டை காட்சிகளில் நந்திதா ‘டூப்’ இல்லாமல் நடித்தார்

4 சண்டை காட்சிகளில் நந்திதா ‘டூப்’ இல்லாமல் நடித்தார்
தமிழ் சினிமாவில் இப்போது, பெண்களை மையப்படுத்திய கதைகள் அதிகமாக வர தொடங்கி இருக்கிறது. சஸ்பென்ஸ், திகில் என பல படங்கள் பெண்களை மைய கதாபாத்திரங்களாக வைத்து வெளிவருகின்றன.
தமிழ் சினிமாவில் நல்ல தருணமாக இது பார்க்கப்படுகிறது. இந்த தருணத்தில் நந்திதா ஸ்வேதா நடிப்பில், ‘ஐ.பி.சி. 376’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இது, திகில்-திருப்பங்கள் மிகுந்த அதிரடியான படம்.

‘அட்டகத்தி’ படத்தில் இருந்தே தனது நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நிரந்தர இடத்தை பிடித்த நந்திதா, இந்த படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார். படத்தில் 4 பயங்கரமான சண்டை காட்சிகள் இடம் பெறுகின்றன. அதில் ‘டூப்’ இல்லாமல் நந்திதா துணிச்சலுடன் நடித்து இருக்கிறார்.

“விஜயசாந்திக்கு பிறகு சண்டை காட்சிகளில் அசாத்தியமான துணிச்சலுடன் நடித்த கதாநாயகி நந்திதா ஸ்வேதாதான்” என்று ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் பாராட்டினார். படத்தை டைரக்டு செய்து வரும் ராம்குமார் சுப்பாராமன் சொல்கிறார்:-

“ இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. படத்தின் தலைப்பில் உள்ள ‘ஐ.பி.சி.376“ என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தை குறிக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தை எஸ்.பிரபாகர் தயாரிக்கிறார்.”

தொடர்புடைய செய்திகள்

1. நந்திதாவும்.. கவர்ச்சி படங்களும்..
நந்திதாவும்.. கவர்ச்சி படங்களும்..

ஆசிரியரின் தேர்வுகள்...