சினிமா செய்திகள்

தமிழ்- மலையாளத்தில் தயாராகிறது; மம்முட்டி-ராஜ்கிரண் இணைந்து நடிக்கும் படம், ‘குபேரன்’ + "||" + Preparing in Tamil- Malayalam; Mammootty-Rajkran co-starring movie, Kuberan

தமிழ்- மலையாளத்தில் தயாராகிறது; மம்முட்டி-ராஜ்கிரண் இணைந்து நடிக்கும் படம், ‘குபேரன்’

தமிழ்- மலையாளத்தில் தயாராகிறது; மம்முட்டி-ராஜ்கிரண் இணைந்து நடிக்கும் படம், ‘குபேரன்’
மம்முட்டியும், ராஜ்கிரணும் முதல் முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். `குபேரன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை அஜய் வாசுதேவ் டைரக்டு செய்துள்ளார்.
ஜோபி ஜார்ஜ் தயாரித்து வருகிறார். தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழி களிலும் படம் தயாராகிறது.

‘குபேரன்’ படத்தின் முழு படப்பிடிப்பும் கேரளா மற்றும் கோவையில் நடைபெற்று முடிவடைந்தது. இந்த படத்தின் தமிழ் உரிமையை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. இந்த நிறுவனம் ராசாவே உன்னை நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மாசிலே, அரண் மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய வெள்ளி விழா படங்களையும், நூறு நாட்கள் படங்களையும் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.

இதில், மீனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். படத்தில் அவர் ராஜ்கிரண் ஜோடியாக வருகிறார். இருவரும் ஏற்கனவே ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தார்கள். 28 வருடங்களுக்குப்பின், இருவரும் மீண்டும் இந்த படத்தில் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள். படத்தில் மம்முட்டிக்கு ஜோடி இல்லை.

படத்தை டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் மம்முட்டி, மோகன்லால் படங்கள் பாதிப்பு
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் மம்முட்டி, மோகன்லால் படங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.