சினிமா செய்திகள்

ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் சந்தானம் ஜோடியாக 2 கதாநாயகிகள் + "||" + Santhanam pairs with 2 heroines in the film directed by R. Kannan

ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் சந்தானம் ஜோடியாக 2 கதாநாயகிகள்

ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் சந்தானம் ஜோடியாக 2 கதாநாயகிகள்
ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் ஆகிய படங்களை இயக்கியவர், ஆர்.கண்ணன். இவர் அடுத்து காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகள் கலந்த ஒரு ஜனரஞ்சகமான படத்தை டைரக்டு செய்து வருகிறார். படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.
சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடிகளாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பலா நடிக்கிறார்கள். இவர்களில், தாரா அலிஷா பெர்ரி, ‘ஏ-1’ படத்தில் நடித்தவர். மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இணைகிறார். இன்னொரு நாயகியான சுவாதி முப்பலா, ‘மிஸ் கர்நாடகா’ பட்டம் வென்றவர். இவர்களுடன் ஆனந்தராஜ், மொட்ட ராஜேந்திரன், பரத்ரெட்டி, டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில், 60 நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இதற்காக பிரமாண்டமான அரங்கு அமைக்கும் வேலை நடை பெற்று வருகிறது. படத்தை வருகிற பிப்ரவரி மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.”