சினிமா செய்திகள்

சிவாஜியின் ‘அந்த நாள்’ தலைப்பில் திகில் படம் + "||" + Shivaji's Antha Naal Horror in the title Movie

சிவாஜியின் ‘அந்த நாள்’ தலைப்பில் திகில் படம்

சிவாஜியின் ‘அந்த நாள்’ தலைப்பில் திகில் படம்
ஏ.வி.எம். பட நிறுவனம் தயாரிப்பில் சிவாஜி கணேசன் நடித்த ‘அந்த நாள்’ தலைப்பில் புதிய படம் தயாராகி உள்ளது.
‘அந்த நாள்’ படத்தில் புதுமுகம் ஆர்யன் ஷாம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் ஏ.வி.எம். சரவணன் பேத்தி அபர்ணாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக ஆதியா பிரசாத் லீமா மற்றும் டி.சிவா, ராஜ்குமார், இமான் அண்ணாச்சி, கிஷோர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

விவீ இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, “அமானுஷ்ய விஷயங்களுடன் திகில் படமாக தயாராகி உள்ளது. ஒரு இயக்குனர் குழு சினிமா படம் எடுக்க கதை விவாதத்துக்காக ஒரு வீட்டில் சென்று தங்குகின்றனர். அங்கு ஒரு கேமரா கிடைக்கிறது. அதில் தெரியும் காட்சிகள் இவர்கள் வாழ்க்கையிலும் நடக்கிறது. அதற்கான காரணம் என்ன என்பது கதை. ஒரு இரவில் நடக்கும் சம்பவமாக தயாராகி உள்ளது” என்றார்.

இந்த படத்தை கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் ஆர்.ரகுநந்தன் தயாரித்துள்ளார். அந்த நாள் படத்தின் முதல் தோற்றம் போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு புதுமுக கதாநாயகன் ஆர்யன் ஷாமை பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஏ.வி.எம். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.சரவணன், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், அபர்ணா குகன் ஷாம், படத்தின் கதாநாயகன் ஆர்யன் ஷாம், இயக்குனர் விவீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.