சினிமா செய்திகள்

இந்தியன்-2 படத்தில் 85 வயது மூதாட்டி வேடமா? காஜல் அகர்வால் விளக்கம் + "||" + Indian -2 film 85year old grandmother role? Kajal Agarwal Description

இந்தியன்-2 படத்தில் 85 வயது மூதாட்டி வேடமா? காஜல் அகர்வால் விளக்கம்

இந்தியன்-2 படத்தில் 85 வயது மூதாட்டி வேடமா? காஜல் அகர்வால் விளக்கம்
இந்தியன் படத்தில் 70 வயது முதியவராக வந்த கமல்ஹாசன் இந்தியன்-2 படத்தில் 90 வயது முதியவராக நடிக்கிறார்.
கமல் ஜோடியாக சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக பேசுகின்றனர். வயதான கமலுக்கு ஜோடியாக நடிக்கும் நிலையில் காஜல் அகர்வால் 85 வயது மூதாட்டியாக நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது.

இது உண்மையா? என்று காஜல் அகர்வாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

“இந்தியன்-2 படத்தில் எனது வேடம் குறித்து விதவிதமான செய்திகள் வருகின்றன. தற்காப்பு கலைகள் தெரிந்த ஒரு பெண்ணாக அந்த படத்தில் நடிக்கிறேன். ஆனால் எனது கதாபாத்திரத்தின் வயது பற்றி மட்டும் கேட்காதீர்கள். அதை சொல்ல மாட்டேன். படத்துக்காக தற்காப்பு கலைகள் கற்று வருகிறேன். இந்த மாதம் தைவானில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. அதில் நானும் கலந்து கொண்டு நடிக்க இருக்கிறேன். சினிமா மீதான விருப்பம், வித்தியாசமான கதைகள் மீதுள்ள ஆர்வத்தால் தயாரிப்பாளராக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நினைத்த மாதிரி கதைகள் அமையாததால் அந்த எண்ணத்தை ஒதுக்கி வைத்து இருக்கிறேன்.

இப்போது கதாநாயகியாக ஓய்வில்லாமல் இருக்கிறேன். தயாரிப்பாளராகி இன்னும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. பாரிஸ் பாரிஸ் படம் நன்றாக வந்துள்ளது. ஆனால் தணிக்கை குழு பிரச்சினையால் படத்துக்கு தடைகள் வருகின்றன. அது நீங்கி படம் திரைக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: நடிகை காஜல் அகர்வாலுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் ஆலோசனை
இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு ஆஜராக, நடிகை காஜல் அகர்வாலுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
2. இந்தியன்-2 படப்பிடிப்பில் 3 பேர் பலியான வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்
பூந்தமல்லியில் இந்தியன்-2 படப்பிடிப்பில் 3 பேர் பலியான வழக்கு, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
3. இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய கமல்ஹாசன், காஜல் அகர்வால், பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்
இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பிய தகவல் வெளியாகி உள்ளது.
4. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - 3 பேர் பலி
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து ஏற்பட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.