சினிமா செய்திகள்

தமிழில் அர்னால்டின் ‘டெர்மினேட்டர் டார்க் பேட்’ + "||" + Arnold's Terminator Dark Pad in Tamil

தமிழில் அர்னால்டின் ‘டெர்மினேட்டர் டார்க் பேட்’

தமிழில் அர்னால்டின் ‘டெர்மினேட்டர் டார்க் பேட்’
டெர்மினேட்டர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அந்த வரிசையில் ‘டெர்மினேட்டர் டார்க் பேட்’ படம் திரைக்கு வந்துள்ளது.
இது தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு உள்ளது. இதில் அர்னால்டு சுவர்ஸ்னெகர், லிண்டா ஹாமில்டன், மெக்கன்சி டேவிஸ், நடாலியா ரேஸ், காப்ரியல் லூனா ஆகியோர் நடித்துள்ளனர். டீம் மில்லர் இயக்கி உள்ளார்.

பூமியில் வசிக்கும் நடாலியாவுக்கு பிறக்கும் குழந்தை எதிர்காலத்தில் எந்திரங்கள் தாக்குதலில் இருந்து உலகை காப்பாற்றும் என்பதால் அவரை காப்பாற்ற மெக்கன்சி டேவிஸ் பாதி மனித உடலும் பாதி எந்திரமுமாக எதிர்காலத்தில் இருந்து வந்து இறங்குகிறார். அதேபோல் நடாலியாவை கொல்வதற்காக முழு எந்திர மனிதன் காப்ரியல் லூனாவும் வருகிறார்.

காப்ரியல் லூனா தாக்குதலில் நடாலியாவின் அண்ணன் இறந்து விடுகிறான். மெக்கன்சியால் மட்டும் எந்திர மனிதனை எதிர்கொள்ள முடியவில்லை. அவருக்கு முன்னாள் எந்திர மனிதர்களான அர்னால்டும், லிண்டாவும் உதவுகிறார்கள். நடாலியா காப்பாற்றப்பட்டாரா? என்பது கிளைமாக்ஸ்.

மெக்கன்சி டேவிஸ் கதைக்கு முக்கிய கதாபாத்திரம். நடாலியாவை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சிகளும் எந்திர மனிதனோடு மோதும் சண்டை காட்சிகளும் சீட் நுனிக்கு இழுக்கின்றன. அர்னால்டு இடைவேளைக்கு பிறகு வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அதிலும் அதிரடி காட்டுகிறார். விமானத்தில் எந்திர மனிதனோடு மோதும் சண்டைகள் மிரட்சியானவை.

வில்லன் எந்திரனாக வரும் காப்ரியல் பார்வையிலேயே மிரட்டுகிறார். சேசிங் காட்சிகள் அதிர வைக்கின்றன. சண்டைப் பிரியர்களுக்கு விருந்து.