சினிமா செய்திகள்

பொங்கல் பண்டிகையில் ரஜினி, கார்த்தி படங்கள் மோதல் + "||" + At the Pongal festival Rajini, Karthi films clash

பொங்கல் பண்டிகையில் ரஜினி, கார்த்தி படங்கள் மோதல்

பொங்கல் பண்டிகையில் ரஜினி, கார்த்தி படங்கள் மோதல்
தீபாவளிக்கு விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்கள் திரைக்கு வந்து இரண்டுமே நல்ல வசூல் பார்த்தன.
இந்த படங்களை பிறமொழிகளில் ரீமேக் செய்யவும் ஆர்வம் காட்டுகின்றனர். அடுத்து டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் இந்த படம் தயாராகி உள்ளது.

அதே நாளில் பாபநாசம் படத்தை எடுத்து பிரபலமான ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படத்தையும் திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. இதில் சத்யராஜ், ஜோதிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதுபோல் பொங்கல் பண்டிகையில் ரஜினிகாந்தின் தர்பார், கார்த்தியின் சுல்தான் ஆகிய 2 படங்களும் மோத இருப்பதாக கூறப்படுகிறது.

தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ரஜினி தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தியின் சுல்தான் படத்தை சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்த ரெமோ படத்தை எடுத்து பிரபலமான பாக்யராஜ் கண்ணன் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து படப்பிடிப்பில் புகுந்து சிலர் போராட்டம் நடத்தினர். இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ரஜினியின் ‘தர்பார்’ 9-ந்தேதி ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரஜினியின் ‘தர்பார்’ 9-ந்தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. தனுஷ் தயாரிப்பில் மீண்டும் புதிய படத்தில் ரஜினி?
ரஜினிகாந்த் தர்பார் படத்தை முடித்து விட்டு சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். பல வருடங்களுக்கு முன்பு அவருடன் ஜோடி சேர்ந்து நடித்த குஷ்புவும் மீனாவும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.
3. கிருஷ்ணகிரியில் ரஜினி பிறந்த நாள் விழா 550 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன
கிருஷ்ணகிரியில் நடந்த ரஜினி பிறந்தநாள் விழாவில் 550 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
4. ‘நான்தாண்டா இனிமேலு, வந்து நின்னா தர்பாரு’ ரஜினியின் அரசியல் பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை வருகிற 7-ந்தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
5. ரஜினி, கமல் இருவரும் இணைந்தாலும் எங்களுக்கு கவலையில்லை - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ரஜினி, கமல் இருவரும் இணைந்தாலும் எங்களுக்கு கவலையில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.