சினிமா செய்திகள்

நடிக்க தடை விதிக்க மனு சர்ச்சையில் நடிகர் பிரகாஷ்ராஜ் + "||" + Petition to ban acting Actor Prakashraj in controversy

நடிக்க தடை விதிக்க மனு சர்ச்சையில் நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிக்க தடை விதிக்க மனு சர்ச்சையில் நடிகர் பிரகாஷ்ராஜ்
பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் பா.ஜனதாவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி கொள்கைகளையும் விமர்சிக்கிறார்.
சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பிரகாஷ்ராஜ் பங்கேற்றபோது, ராம்லீலா நிகழ்ச்சியை குழந்தைகள் ஆபாசத்துடன் ஒப்பிட்டு பேசியதாக சர்ச்சைகள் கிளம்பின. அவர் பேசிய வீடியோவும் வலைத்தளத்தில் வைரலானது.

ராம்லீலா நிகழ்ச்சியில் பங்கேற்றதாக உத்தரபிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத்தையும் கண்டித்து இருந்தார். இதைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.


இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் திரைப்படங்களில் நடிக்க வாழ்நாள் தடைவிதிக்கும்படி வற்புறுத்தி இந்து மகாசபா உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் கன்னட திரைப்பட வர்த்தக சபையில் மனு அளித்துள்ளன.

அந்த மனுவில், “இந்து மதத்தையும் இந்து மத தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து பேசி வருவது இந்து மக்களின் மனதை புண்படுத்துகிறது. எனவே அவருக்கு நடிக்க தடைவிதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.