சினிமா செய்திகள்

ஓட்டல் அதிபராக மாறிய சூரி + "||" + Soori, who became president of the hotel

ஓட்டல் அதிபராக மாறிய சூரி

ஓட்டல் அதிபராக மாறிய சூரி
நடிகர்கள் சினிமாவில் நடித்துக்கொண்டே ஓட்டல் தொழிலிலும் ஈடுபடுகின்றனர். சென்னையில் நடிகர்கள் ஆர்யா, கருணாஸ் ஆகியோர் ஓட்டல் வைத்துள்ளனர்.
ஜீவாவும் ஓட்டல் திறந்தார். அதை தற்போது மூடிவிட்டதாக கூறப்படுகிறது. பிரபல நகைச்சுவை நடிகர் சூரியும் ஓட்டல் தொழிலில் இறங்கி இருக்கிறார்.

இவர் வெண்ணிலா கபடி குழு படத்தில் அதிக பரோட்டாக்களை சாப்பிடும் போட்டியில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு படங்கள் குவிந்தன. சந்தானம் கதாநாயகனாகி விட்டதால் அவருக்கு வந்த நகைச்சுவை வேடங்களும் சூரி கைக்கு மாறின. முன்னணி கதாநாயகர்கள் சூரியை தங்கள் படங்களில் சிபாரிசு செய்கின்றனர்.

ரஜினிகாந்தின் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஒரு நாள் சம்பளமாக ரூ.5 லட்சம் வாங்குவதாக தகவல். சூரி ஏற்கனவே மதுரையில் ஒரு ஓட்டல் தொடங்கினார். தற்போது மேலும் 2 ஓட்டல்கள் திறந்துள்ளார். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் அவரது ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு வந்துள்ளனர். இந்த ஓட்டல் கிளைகளை மேலும் சில ஊர்களில் திறக்க முடிவு செய்துள்ளாராம்.