சினிமா செய்திகள்

சூர்யா படம் தள்ளிவைப்பு? + "||" + Surya movie postponed?

சூர்யா படம் தள்ளிவைப்பு?

சூர்யா படம் தள்ளிவைப்பு?
‘காப்பான்’ படத்துக்கு பிறகு சூர்யா நடித்து வரும் சூரரை போற்று பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த படத்தை ‘இறுதி சுற்று’ படத்தை எடுத்து பிரபலமான சுதா கொங்கரா இயக்குகிறார். அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
சூரரை போற்று படம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 20-ந்தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென்று தள்ளி வைத்துள்ளனர். பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகிறது.

சூரரை போற்று படத்துக்கு பிறகு ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் கூட்டணியில் ஆறு, வேல் படங்கள் வந்தன. மீண்டும் சிங்கம் படத்தில் இணைந்தார்கள். இந்த படத்தில் சூர்யாவின் துரை சிங்கம் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்தது.

அதன்பிறகு சிங்கம் படத்தின் 2-ம் பாகம் 3-ம் பாகங்களும் வந்தன. ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள புதிய படம் சிங்கம் படத்தின் 4-ம் பாகமா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. அது சிங்கம் படத்தின் தொடர்ச்சி இல்லை வேறு கதை என்று ஹரி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சூர்யா, மிஷ்கின், வெங்கட்பிரபுவின் அயன், அஞ்சாதே, சென்னை-28 அடுத்த பாகங்கள்?
சூர்யா, மிஷ்கின், வெங்கட்பிரபுவின் அயன், அஞ்சாதே, சென்னை-28 அடுத்த பாகங்கள் எடுப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2. ‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் உதவி
‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்தனர்.
3. ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்!
திறமையான நடிகர்கள் மற்றும் சிறந்த டைரக்டர்களை அழைத்து, அவர்களை மனம் திறந்து பாராட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார், சூர்யா.
4. சர்ச்சையில் சூர்யாவின் ‘அருவா’ தலைப்பு
சூர்யா தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
5. தீபாவளி விருந்தாக சூர்யா-ஹரி இணையும் 6-வது படம், `அருவா’
சூர்யா-ஹரி இணைந்து பணிபுரியும் 6-வது படத்துக்கு, `அருவா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.