சினிமா செய்திகள்

கமல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த் + "||" + Rajinikanth to attend Kamal event

கமல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்

கமல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் ரஜினிகாந்த்
நடிகர் கமலின் 65 வது பிறந்த நாள் விழா மற்றும் 60 ஆம் ஆண்டு கலைப்பயண கொண்டாட்டத்தில் நடிகர் ரஜினியும் பங்கேற்க உள்ளார்.
சென்னை,

நடிகர் கமலின் 65 வது பிறந்த நாள் விழா மற்றும் 60 ஆம் ஆண்டு கலைப்பயண கொண்டாட்டம், வரும்  7ஆம் தேதி பரமக்குடியிலும், 8 ஆம் தேதி சென்னையிலும் நடக்கிறது.

அதனை தொடர்ந்து, வரும் 17 ஆம் தேதி சென்னை எஸ்.டி.ஏ.டி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நட்சத்திர கலைவிழாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

இதில் கமலின் 44 ஆண்டுகால நண்பரும், நடிகருமான ரஜினி கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 2021-ல் அதிசயம் நிகழுமா?
2021-ம் ஆண்டில் அதிசயம்-அற்புதம் நிகழும் என்று சமீபத்தில் அவர் சொன்னது விவாதத்துக்கும், சர்ச்சைக்கும், பரபரப்புக்கும் உள்ளாகிவிட்டது.
2. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுகவினர் அவரிடம் தான் செல்வார்கள் -சுப்பிரமணியன் சுவாமி
கட்சியை நல்ல முறையில் நடத்தும் திறமை சசிகலாவுக்கு உள்ளது. அவர் வெளியே வந்தவுடன் அதிமுகவினர் அவரிடம் தான் செல்வார்கள் என சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.
3. 2021-ல் தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்துவார்கள் - ரஜினிகாந்த் உறுதி
2021 அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள் என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
4. மக்களின் நலனுக்காக, நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
5. ரஜினிகாந்துக்கு சிறப்பு நட்சத்திரத்துக்கான விருது -மத்திய அரசு
ரஜினிகாந்துக்கு சிறப்பு நட்சத்திரத்துக்கான விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.