சினிமா செய்திகள்

நடிகை மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு + "||" + Case filed under 2 sections on actress Meera Mithun

நடிகை மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

நடிகை மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
நடிகை மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

2019-ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றவரும், சில திரைப்படங்களில் நடித்தவருமான நடிகை மீரா மிதுன், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர். சமீபத்தில் கடந்த 3-ந்தேதி எழும்பூரில் உள்ள ரேடிகன் புளு ஓட்டலில் பேட்டி அளித்தார்.

அப்போது  மும்பையில் பாதுகாப்பாக உணர்வதால் அங்கு வசிப்பதாகவும், தமிழகத்தில் போதிய பாதுகாப்பு இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.  அத்துடன் தமிழக போலீசார் மீது பல விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், போலீஸ் அதிகாரிகள் பற்றி மீரா மிதுன் பேட்டி அளித்தபோது, ஓட்டல் ஊழியரான அருண் என்பவர் தட்டிக் கேட்டதாகவும் அப்போது மீரா மிதுன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது பற்றி எழும்பூர் காவல் நிலையத்தில் அருண் புகார் அளித்தார். இதையடுத்து மீரா மிதுன் மீது அவதூராக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

எழும்பூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே மீரா மிதுன் மீது இதேபோன்று மிரட்டல் வழக்கு நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.