சினிமா செய்திகள்

நடிகர் விஜயின் "பிகில்" ரூ.250 கோடி வசூலை கடந்து சாதனை + "||" + Actor Vijay Bigil The record crossing Rs 250 crore

நடிகர் விஜயின் "பிகில்" ரூ.250 கோடி வசூலை கடந்து சாதனை

நடிகர் விஜயின் "பிகில்" ரூ.250 கோடி வசூலை கடந்து சாதனை
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் ரூ.250 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது.
சென்னை,

விஜய்-அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக  வெளியாகியுள்ள படம் 'பிகில்'.  180 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் படம் வெளியானது. ஆனால், விமர்சன ரீதியாக கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியாகப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

மெர்சல் மற்றும் சர்க்காருக்குப் பிறகு விஜயின் ரூ.200 கோடியை எட்டிய மூன்றாவது படம் பிகில். இந்த  திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாறுவதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது. 

இந்நிலையில் தற்போது, பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.