சினிமா செய்திகள்

பட அதிபர் கோரிக்கையை ஏற்க சம்மதம் ; ‘மாநாடு’ படத்தில் மீண்டும் சிம்பு? + "||" + Agreed to film producer request ; Simbu back in maanadu film?

பட அதிபர் கோரிக்கையை ஏற்க சம்மதம் ; ‘மாநாடு’ படத்தில் மீண்டும் சிம்பு?

பட அதிபர் கோரிக்கையை ஏற்க சம்மதம் ; ‘மாநாடு’ படத்தில் மீண்டும் சிம்பு?
சிம்பு நடிப்பில் கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி படங்களும், அதைத்தொடர்ந்து வந்தா ராஜாவாதான் வருவேன் படமும் திரைக்கு வந்தன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர். ஆனால் அந்த படம் திடீரென்று கைவிடப்பட்டது. 

குறிப்பிட்ட தேதியில் சிம்பு நடிக்க வராமல் தாமதம் செய்ததால் படத்தை நிறுத்தியதாக கூறப்பட்டது. சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அதோடு வேறு நடிகரை வைத்து மாநாடு பட வேலைகளை தொடங்கவும் திட்டமிட்டனர். இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. மாநாடு படத்தில் சிம்பு நடித்து கொடுப்பார் என்று அப்போது உறுதி அளிக்கப்பட்டது. படப்பிடிப்புக்கு உரிய நேரத்தில் வரவேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உறுதிமொழி ஒப்பந்தத்தில் சிம்பு கையெழுத்திட்டால் படப்பிடிப்பை தொடங்க தயார் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறினார்.

அவரது கோரிக்கையை ஏற்று ஒப்பந்தத்தில் சிம்பு கையெழுத்திட சம்மதித்துள்ளதாக தகவல் பரவி உள்ளது. சுரேஷ் காமாட்சி கூறும்போது ஒப்பந்தத்தில் சிம்பு இன்னும் கையெழுத்திடவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது. சிம்பு நடிப்பதற்கான சாதமான முடிவுகள் சூழ்நிலை உருவாகும் என்று நம்பிக்கை உள்ளது” என்றார்.