சினிமா செய்திகள்

புதிய படத்தில் அஜித் ஜோடி யார்? + "||" + Who is Ajith's couple in the new movie?

புதிய படத்தில் அஜித் ஜோடி யார்?

புதிய படத்தில் அஜித் ஜோடி யார்?
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு வலிமை என்று தலைப்பு வைத்துள்ளனர்.
அதிரடி சண்டை படமாக உருவாகிறது. அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல். இதற்காக தோற்றத்தை இளமையாக மாற்றி இருக்கிறார்.

மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகள் இடம்பெறுகின்றன. இந்த படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய்யை பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் வில்லனாக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் வலிமை படத்தில் அஜித் ஜோடியாக நடிப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நயன்தாரா, திரிஷா, தமன்னா, நஸ்ரியா, மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. இதில் நஸ்ரியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அஜித் படத்தில் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை என்று நஸ்ரியா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘வலிமை’ படத்தில் அஜித்குமாருக்கு 3 வில்லன்கள்
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது.
2. ‘பைக்’கில் சாகசம் செய்தபோது ‘வலிமை’ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கினார், அஜித்
ஆபத்தான காட்சிகளை படமாக்கும்போது, ‘டூப்’ நடிகர்களை பயன்படுத்தாமல், ஒரிஜினலாக உயிரை பணயம் வைத்து நடிக்கும் துணிச்சல் மிகுந்தவர், அஜித்குமார்.