சினிமா செய்திகள்

“சினிமாவில் நான் செய்த பெரிய தவறு” - நயன்தாரா + "||" + "My biggest mistake in cinema" - Nayantara

“சினிமாவில் நான் செய்த பெரிய தவறு” - நயன்தாரா

“சினிமாவில் நான் செய்த பெரிய தவறு” - நயன்தாரா
தமிழ் பட உலகில் நம்பர்-1 நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.4 கோடி வாங்குகிறார்.
ரேடியோ ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் செய்த பெரிய தவறை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் கூறியதாவது:-

“சூர்யாவின் கஜினி படத்தில் நடித்ததுதான் எனது சினிமா வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு. அந்த படத்தில் சித்ரா என்ற மருத்துவ மாணவியாக வந்தேன். கஜினி படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னபோது வேறு மாதிரி இருந்தது. ஆனால் படப்பிடிப்பு நடந்தபோது எனது கதாபாத்திரத்தை வேறு விதமாக மாற்றி எடுத்து விட்டனர். இதனால் என்னை மோசடி செய்து விட்டதாக உணர்ந்தேன். அதன்பிறகு கதைகளை கவனமாக தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தேன்.

இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.

கஜினி படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்த அசின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த படம் அசின் திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. கஜினியை இந்தியில் ரீமேக் செய்து அமீர்கான் நடித்தபோது அதில் அசினையே நடிக்க வைத்தார். அதன் பிறகு இந்தியில் சல்மான்கான், அக்‌ஷய்குமார், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சம்பளத்தை மேலும் உயர்த்தினார்!
நயன்தாரா இதுவரை ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்தார். இப்போது தனது சம்பளத்தை ரூ.6 கோடியாக உயர்த்தி விட்டார். இந்த சம்பளத்தை கொடுத்தால் நடிப்பது, கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை.
2. முருகதாஸ் மீது நயன்தாரா கடும் கோபம்
தர்பார் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை வீணடித்து இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொந்தளிக்கிறார்கள். படத்தில் சில காட்சிகளில் மட்டும் அவர் வருகிறார் என்றும், ஒரு துணை நடிகை போலவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்றும் வருத்தப்படுகின்றனர்.
3. காதல் முறிவு வதந்தியால் நயன்தாரா அதிர்ச்சி; ஜோடி புகைப்படத்தை வெளியிட்டனர்
நயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவன் காதல் வாழ்க்கை பல வருடங்களாக நீடித்து வருகிறது. ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நெருக்கத்தை வெளிப்படுத்தினர்.
4. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நயன்தாரா காதலனுடன் சாமி தரிசனம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் காதலன் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.
5. திருப்பதியில் என்ன வேண்டுதல்?
நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சமீபத்தில் திருப்பதி சென்று வந்தார்கள்.