சினிமா செய்திகள்

டெல்லி காற்று மாசு: விஜய் படப்பிடிப்புக்கு சிக்கல் + "||" + Delhi Air Pollution: Trouble With Vijay Shooting

டெல்லி காற்று மாசு: விஜய் படப்பிடிப்புக்கு சிக்கல்

டெல்லி காற்று மாசு: விஜய் படப்பிடிப்புக்கு சிக்கல்
விஜய்யின் பிகில் படம் தீபாவளிக்கு திரைக்கு வந்து ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
விஜய்க்கு இது 64-வது படமாகும். கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அவர் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறாரா? நண்பனாக வருகிறாரா? என்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. பாக்யராஜ் மகன் சாந்தனு, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரிகிதா ஆகியோரும் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

இந்த படத்தில் விஜய் பேராசிரியராக நடிப்பதாக தகவல். சாந்தனு கல்லூரி மாணவராக வருகிறார். அவருக்கு வில்லன் வேடம் என்று கூறப்படுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் முடிந்தது. தற்போது டெல்லியில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

டெல்லியில் நிலவி வரும் காற்று மாசு காரணமாக விஜய் படப்பிடிப்புக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. படக்குழுவினரால் வெளியே வரமுடியவில்லை. காற்று மாசு குறைந்த பிறகே படப்பிடிப்பை தொடங்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா? - டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்
விஜய்யின் மாஸ்டர் படம் ஓ.டி.டி.யில் வெளியாகுமா என்று டைரக்டர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
2. விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம்
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
3. விஜய்யை எம்.ஜி.ஆராக சித்தரித்த போஸ்டர் :"எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது" - அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து
எம்.ஜி.ஆர் போல் சித்தரிப்பதன் மூலம் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
4. விஜய்யின் மாஸ்டர் ஓ.டி.டி.யில் வெளியாகுமா?
விஜய்யின் மாஸ்டர் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட படக்குழுவினருடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன.
5. விஜய்யின் ‘சச்சின்’ 2-ம் பாகம்?
தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்துள்ளன. ரஜினிகாந்தின் எந்திரன் 2-ம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது.