சினிமா செய்திகள்

சென்னை வசூலில் பாகுபலி 2-வை மிஞ்சிய விஜயின் பிகில் + "||" + Bigil vs Baahubali 2 at box office Vijays film ahead of Prabhas-starrer in this centre

சென்னை வசூலில் பாகுபலி 2-வை மிஞ்சிய விஜயின் பிகில்

சென்னை வசூலில் பாகுபலி 2-வை மிஞ்சிய விஜயின் பிகில்
நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ கூட்டணியில் வெளியாகியுள்ள 'பிகில்' படம் வசூலில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னை

விஜய்-அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக வெளியாகியுள்ள படம் 'பிகில்'. 180 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட  மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் படம் வெளியானது. ஆனால், விமர்சன ரீதியாக கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியாகப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மெர்சல் மற்றும் சர்க்காருக்குப் பிறகு விஜய்யின் ரூ.200 கோடியை எட்டிய மூன்றாவது படம் பிகில். இந்த திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாறுவதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது.

இந்நிலையில், தற்போது, பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

பாகுபலி 2 இன் தொடக்க வார இறுதி சாதனையை பிகில் முந்தி உள்ளது. விஜய் நடித்த பிகில் முதல் வார இறுதி நாட்களில் 675 காட்சிகளில் 5.33 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. அதே நேரத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி-2 சென்னையில் 828 காட்சிகளில் ரூ.3.24 கோடியை மட்டுமே  வசூலித்து உள்ளது.

பிகில் அதன் இரண்டாவது வார இறுதியில், ரூ. 2.09 கோடி சம்பாதித்தது, அதன் 10 நாள் மொத்த வசூல் ரூ.10.76 கோடியாக உள்ளது.

பாகுபலி-2 வார நாட்களில் 988 காட்சிகளில் ரூ.3.88 கோடியை வசூலித்து, அதன் இரண்டாவது வார இறுதியில் 777 காட்சிகளில் இருந்து ரூ.2.73 கோடியை வசூலித்தது அதன் 10 நாள் மொத்த வசூல் ரூ .9.06 கோடியாக இருந்தது.

பாகுபலி 2 சென்னையில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தலைநகரான சென்னையில் முதல் ஐந்து படங்களின் வசூலைப் பாருங்கள்.

சினிமாவசூல்
கபாலிரூ. 24 கோடி
2.0ரூ. 23 கோடி
பாகுபலி 2ரூ.18 கோடி
பேட்டரூ. 15.56 கோடி
சர்கார்ரூ. 15.50 கோடி
இதற்கிடையில், விஜய் மற்றும் நயன்தாரா நடித்த பிகில் அஜித்தின் விஸ்வாசத்தின் (ரூ.12.54 கோடி) வாழ்நாள் வசூலை அதன் இரண்டாவது வார இறுதிக்குள் மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க- நடிகர் சூர்யா
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.
2. நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் - இர்பான் பதான்
நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் என கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்து உள்ளார்.
3. யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்று அல்லு அர்ஜுன் படம் சாதனை
இந்தியாவிலேயே முதல்முறையாக யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்ற அல்லு அர்ஜுன் படம்
4. துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டேன் - பிரபல நடிகை
துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுவதாக நடிகை அக்‌ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.
5. திருமணம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை - நடிகை ஓவியா
திருமணம் செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என நடிகை ஓவியா கூறி உள்ளார்.