சினிமா செய்திகள்

கமல் அரசியலுக்கு வந்தாலும் கலையை கைவிடமாட்டார் -நடிகர் ரஜினிகாந்த் + "||" + Actor Rajinikanth praises kamalhasan

கமல் அரசியலுக்கு வந்தாலும் கலையை கைவிடமாட்டார் -நடிகர் ரஜினிகாந்த்

கமல் அரசியலுக்கு வந்தாலும் கலையை கைவிடமாட்டார் -நடிகர் ரஜினிகாந்த்
அரசியலுக்கு வந்தாலும், தாய்வீடான சினிமாவை கமல்ஹாசன் மறக்கமாட்டார் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் இயக்குனர் பாலச்சந்தரின் சிலையை நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் ரஜினிகாந்த் பேசியதாவது:-  

எனது கலையுலக அண்ணன் கமல்ஹாசன் மற்றும் அனைவருக்கும் நன்றி.  என்னைப்போல பல கலைஞர்களுக்கு தந்தை, குரு, பிதாமகன் பாலச்சந்தர்தான். அரசியலுக்கு வந்தாலும், தாய்வீடான சினிமாவை மறக்கமாட்டார் கமல். கலையை உயிராக கொண்டிருப்பவர் கமல்ஹாசன்.

கிராபிக்ஸ் இல்லாத காலத்திலேயே அபூர்வ சகோதர்கள் படம் எடுத்தவர் கமல்ஹாசன். அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்த்து விட்டு நள்ளிரவு கமல்ஹாசன் வீட்டிற்கு சென்று வாழ்த்தினேன். ஹேராம் படத்தை 30, 40 படத்தை பார்த்துள்ளேன். நான் அடிக்கடி பார்க்கும் படங்கள் ஹேராம், காட்பாதர், திருவிளையாடல் ஆகிய படங்கள்தான்” இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்த் 2020-ல் கட்சி தொடங்குவார்... 2021-ல் அதிசயம் அற்புதம் நிகழும் - சத்தியநாராயண ராவ்
2020-ல் கட்சி தொடங்குவார்... ரஜினிகாந்த் கூறிய அதிசயம் அற்புதம் நிகழும் என சகோதரர் சத்தியநாராயண ராவ் கூறி உள்ளார்.
2. ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கும் மீனா - குஷ்பு
நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து நடிக்கும் மீனா-குஷ்பு
3. மன்றத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது - ரஜினி மக்கள் மன்றம்
மன்றத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
4. ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயரை சித்திரை மாதம் அறிவிக்க வாய்ப்பு?
ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயரை வரும் சித்திரை மாதம் அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
5. கீரமங்கலத்தில் ரஜினிகாந்த் பிறந்த நாளை இனிப்புடன் வெங்காயம் வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்
கீரமங்கலத்தில் ரஜினிகாந்த் பிறந்தநாளை இனிப்புடன் வெங்காயத்தையும் வழங்கி ரசிகர்கள் கொண்டாடினர்.