தெலுங்கில் ‘நேர் கொண்ட பார்வை’; அஜித் வேடத்தில் பவன் கல்யாண்


தெலுங்கில் ‘நேர் கொண்ட பார்வை’; அஜித் வேடத்தில் பவன் கல்யாண்
x
தினத்தந்தி 8 Nov 2019 11:00 PM GMT (Updated: 2019-11-09T01:32:55+05:30)

அமிதாப்பச்சன் டாப்சி நடித்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிய பிங்க் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தமிழில் நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் தயாரித்தார்.

அமிதாப்பச்சன் வேடத்தில் அஜித்குமார் நடித்தார். வித்யாபாலன், ஷரத்தா ஸ்ரீநாத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தார்கள்.

இந்த படம் திரைக்கு வந்து பெரிய வரவேற்பை பெற்றது. வசூலும் குவித்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கிலும் இந்த படத்தை போனிகபூர் ரீமேக் செய்கிறார்.

இதற்கான நடிகர்கள் தேர்வு நடந்தது. அஜித் வேடத்தில் நடிக்க பவன் கல்யாண் தேர்வாகி உள்ளார். பவன் கல்யாண் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி ஆவார்.

ஆந்திராவில் ஜனசேனா என்ற அரசியல் கட்சியை தொடங்கி சினிமாவை விட்டு பவன் கல்யாண் விலகினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த கட்சி படுதோல்வி அடைந்தது. பவன் கல்யாணும் தோல்வி அடைந்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்த படத்தை போனிகபூர், தில் ராஜூ ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஸ்ரீராம் வேணு இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Next Story