குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ரஜினிகாந்த் அரசியலுக்கு போய்விட்டால், சினிமாவில் நடிப்பாரா? (ஏ.ஜெய்கணேஷ், சென்னை–18)
ரஜினிகாந்த் அரசியலுக்கு போய்விட்டால், சினிமாவில் நடிக்க மாட்டார். அதனால்தான் அவசரம் அவசரமாக படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறாராம்!
***
உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ‘சைக்கோ’ படம் எப்போது திரைக்கு வரும்? (பி.வெற்றிவேல், பொங்கலூர்)
‘சைக்கோ’ படம் அடுத்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வரும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
***
குருவியாரே, நடிகர்கள் மீதும், டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீதும் பாலியல் புகார் செய்த ஸ்ரீரெட்டி அப்படி ஒன்றும் பேரழகி கிடையாது. அவரைப்போய்....எப்படி? (எம்.சீனிவாசன், பெரம்பலூர்)
உங்கள் கண்களுக்கு ஸ்ரீரெட்டி அழகியாக தெரியவில்லை. மற்றவர்களின் கண்களுக்கு அவர் பேரழகியாக தெரிந்தார் போலும்!
***
‘‘வா...வா...வசந்தமே...’’ பாடல் இடம்பெற்ற படம் எது? அந்த பாடல் காட்சியில் நடித்தவர் யார்? (இரா.செல்வகுமார், பூந்தமல்லி)
அந்த பாடல் இடம்பெற்ற படம், ‘புதுக்கவிதை.’ பாடல் காட்சியில் நடித்தவர், ரஜினிகாந்த்!
***
குருவியாரே, கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்த படங்களில், மிக ஆக்ரோஷமான சண்டை காட்சிகளை கொண்ட படம் எது? (அர்ஜுன், ஸ்ரீபெரும்புதூர்)
‘குருதிப்புனல்.’ ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடுவது போன்ற சண்டை காட்சிகளை கொண்ட படம், அது!
***
தற்போது உள்ள கதாநாயகிகளில், உணவு கட்டுப்பாடுகளை அதிகமாக கடைபிடிப்பவர் யார்? உணவு கட்டுப்பாடுகளே வைத்துக்கொள்ளாத கதாநாயகி யார்? (ஆர்.கோபால், திண்டுக்கல்)
உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிப்பவர், அனுஷ்கா! கட்டுப்பாடுகளே வைத்துக் கொள்ளாதவர், திரிஷா!
***
குருவியாரே, மற்ற நடிகைகளில் இருந்து நயன்தாரா எப்படி மாறுபடுகிறார்? (ஏ.சி.தவமணி, கரூர்)
முதன்முதலாக கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய தென்னிந்திய கதாநாயகி நயன்தாராதான். தன்னிடம் வேலை பார்ப்பவர்களை கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்ளும் ஒரே கதாநாயகியும் அவர்தான். அடிக்கடி காதலர்களை மாற்றிக்கொள்ளும் கதாநாயகியும் அவர்தான்!
***
‘அசுரன்’ படத்தின் வெற்றிக்கு காரணம் யார்? (அன்புக்கரசு, நாகர்கோவில்)
கதாநாயகன் தனுஷ், டைரக்டர் வெற்றி மாறன்...இருவருமே...!
***
குருவியாரே, சிவகார்த்திகேயனை ‘‘தம்பி’’ என்று அழைக்கும் நகைச்சுவை நடிகர் சூரி, விஜய்சேதுபதியை என்ன உறவை சொல்லி அழைக்கிறார்? (எஸ்.தன்வீர் அகமது, போளூர்)
விஜய்சேதுபதியை சூரி, ‘‘மாமா’’ என்று அழைக்கிறார்!
***
ஒரு குழந்தைக்கு தாயான அசின், மீண்டும் நடிக்க வருவாரா? (ஆர்.கிறிஸ்டோபர், தூத்துக்குடி)
அதற்குத்தான் அசின் மீண்டும் முயற்சித்து வருகிறார்!
***
குருவியாரே, குடும்ப வாழ்க்கையை மிக இயல்பாக காட்சிப்படுத்திய முதல் தமிழ் டைரக்டர் யார்? (வி.உதயகுமார், வேலூர்)
பீம்சிங்! இவரை அடுத்து, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்!
***
பெரும்பாலான நடிகைகள் விளம்பர படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பது ஏன்? (எம்.வசந்தராஜ், ஊட்டி)
குறைந்த நாட்களில், அதிக சம்பளம் கிடைப்பது, விளம்பர படங்களில்தான்...!
***
குருவியாரே, சூர்யாவும், அவருடைய தம்பி கார்த்தியும் எப்போது இணைந்து நடிப்பார்கள்? (எச்.நசீர், தேனி)
அதற்கான கதையை ஒரு டைரக்டர் தேடி வருகிறார்!
***
விஷ்ணு விஷால் நடித்த ‘ராட்சதன்’ படத்தின் இரண்டாம் பாகம் வருமா? (என்.பால்பாண்டி, மதுரை)
முதல் பாகத்துக்கு வெற்றி கிடைத்ததால், இரண்டாம் பாகத்தை உருவாக்குவதில் அந்த படக்குழுவினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்!
***
குருவியாரே, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்து பெயர் வாங்கிய நடிகை யார்? (பி.கோமதி, கடையநல்லூர்)
கே.ஆர்.விஜயா!
***
சோனியா அகர்வால் மதுவுக்கு அடிமையாகி விட்டாராமே...? உண்மையா? (ஸ்ரீதர்ராஜன், உளுந்தூர்பேட்டை)
எப்போதோ வெளியே தெரியவேண்டிய ரகசியம், காலதாமதமாக இப்போது தெரியவந்து இருக்கிறது!
***
குருவியாரே, ஓவியாவுக்கு அழகும், நடிப்பு திறனும் இருந்தும் முதல் வரிசை நாயகியாக பிரகாசிக்க முடியவில்லையே...ஏன்? (கே.ராம்குமார், குடியாத்தம்)
அதைத்தான் ‘விதி’ என்கிறார்களோ...?
***
மலையாள நடிகை பார்வதி நாயர் தன் பெயரை பார்வதி என்று சுருக்கிக் கொண்டது ஏன்? (பி.தனுஷ், சேலம்)
பார்வதி, சாதி–மத வேறுபாடுகளில் நம்பிக்கை இல்லாதவர். அதனால்தான் தனது பெயருடன் ஒட்டிக்கொண்டிருந்த சாதி பெயரை நீக்கி விட்டார்!
***
குருவியாரே, விளையாட்டு வீராங்கனை வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய கதாநாயகி யார்? (எம்.ஜீவா, பேரணாம்பட்டு)
விளையாட்டு வீராங்கனை வேடம் என்றாலே முதலில் தேடப்படுபவர்கள்: சாய் தன்சிகாவும், ரித்திகாசிங்கும்தான்!
***
தமிழ் பட உலகின் கவர்ச்சி நடிகைகள் எல்லோரும் என்ன ஆனார்கள்? இப்போதெல்லாம் அவர்களை திரையில் பார்க்க முடிவதில்லையே...? (ஆர்.டேவிட், திருச்சி)
கவர்ச்சி நடனங்களையும், காட்சிகளையும் கதாநாயகிகளே செய்து விடுவதால், கவர்ச்சி நடிகைகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது!
***
Related Tags :
Next Story