சினிமா செய்திகள்

தெலுங்கு அசுரனில் ஸ்ரேயா + "||" + Shreya will star in a Telugu ASURAN

தெலுங்கு அசுரனில் ஸ்ரேயா

தெலுங்கு அசுரனில் ஸ்ரேயா
தெலுங்கு அசுரனில் ஸ்ரேயா நடிக்க உள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்-மஞ்சு வாரியர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த அசுரன் படம் ரூ.100 கோடிக்குமேல் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தெலுங்கு, இந்தி நடிகர்கள் பார்த்து பாராட்டினர்.

கமல்ஹாசனும் மஞ்சுவாரியரை அழைத்து வாழ்த்தியதுடன் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்குமாறு அறிவுரை வழங்கினார். பிரகாஷ்ராஜ், பசுபதி ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த நிலையில் அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கி உள்ளன.

இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. முன்னணி நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். தற்போது ஸ்ரேயா தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரேயா ‘சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ளார். தனுசுடன் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடித்தார். மேலும் முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக வந்தார். தற்போது தமிழில் அவருக்கு வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தியிலும் அசுரன் படம் ரீமேக் ஆகிறது. தனுஷ் வேடத்தில் நடிக்க ஷாருக்கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. காப்பான், அசுரன், ஆக்‌ஷன்: தீபாவளிக்கு முன்பு திரைக்கு வரும் 10 படங்கள்
விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய 2 படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தீபாவளிக்கு முன்பு 10 பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.