சினிமா செய்திகள்

‘சஸ்பென்ஸ்’-திகிலுடன் ‘யாரோ’ படத்தில், தொடர் கொலைகள் + "||" + Yarrow In the film, A series of murders

‘சஸ்பென்ஸ்’-திகிலுடன் ‘யாரோ’ படத்தில், தொடர் கொலைகள்

‘சஸ்பென்ஸ்’-திகிலுடன் ‘யாரோ’ படத்தில், தொடர் கொலைகள்
படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் ‘சஸ்பென்ஸ்’-திகிலுடன், ‘யாரோ’ என்ற மர்ம படம் தயாராகி வருகிறது. புதுமுகம் வெங்கட் ரெட்டி கதைநாயகனாக நடிக்க, கதாநாயகி உபாசனா நடிக்கிறார். சந்தீப் சாய் டைரக்டு செய்கிறார்.
‘யாரோ’ படத்தை பற்றி சந்தீப் சாய் கூறியதாவது:-

“2019-ம் ஆண்டின் சிறந்த படமாக, ‘யாரோ’ இருக்கும். இதை ஒரு சவாலாகவே சொல்கிறோம். ஒரு கொலை மர்ம பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் கதை. ஒரு தனித்துவமான கதையுடன், சிறப்பான படத்தை கொடுக்க முயற்சிக்கிறோம். பார்வையாளர்கள் அதை விரும்புவார்கள் என்று நம்புகிறோம்.,

தனிமையில் வாழும் ஒரு இளைஞரை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நடக்கும் மர்ம கொலைகளில், அந்த இளைஞரை சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. யார் என்றே தெரியாத ஆபத்தான மற்றும் மிருகத்தனமான கொலைகாரனின் இலக்காக கதாநாயகன் மாறுகிறார்.

கொலைகாரனின் இருப்பு எல்லா இடங்களிலும் உணரப்படுவதால், கதாநாயகன் தன்னை சுற்றியுள்ள கொலைகளின் மர்மத்தை உடைக்க முயற்சிக்கிறார். அவருடைய முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா? என்பதே படத்தின் உச்சக்கட்ட காட்சி!”