லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’


லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’
x
தினத்தந்தி 12 Nov 2019 4:24 PM IST (Updated: 12 Nov 2019 4:58 PM IST)
t-max-icont-min-icon

லட்சுமி ராமகிருஷ்ணன் ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்ற பெயரில், யூ டியூப்பில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களை இயக்கிய லட்சுமி ராம கிருஷ்ணன் அடுத்து, ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்ற பெயரில், யூ டியூப்பில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இவர் ஏற்கனவே ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற டி.வி. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இவருடைய சமீபத்து படமான ‘ஹவுஸ் ஓனர்,’ இந்திய தேசிய திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. இது, வாழ்க்கையில் கொடுமைகளை சந்திக்கும் மனிதர்களை சந்தித்து உதவி செய்யும் நிகழ்ச்சி. இதுபற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

“சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சி மூலம் பலர் உந்தப்பட்டு தங்கள் வாழ்வில் தெளிவடைந்ததை கூறும்போது, அது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும். என்னை நேரிலும், இணையம் வழியாகவும் தங்கள் பிரச்சினைகளை என்னிடம் உறவாய் நினைத்து கூறுவதும், தீர்வு கேட்பதும் என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அந்த ஊக்கத்தினால்தான் ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி என்னை சந்தோஷப்படுத்தும். நிகழ்ச்சியில் கலந்து கொள்பவரின் வாழ்வை மாற்றக் கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்நிகழ்ச்சியை சமுதாயத்துக்கு நான் செய்யும் நன்றிக்கடனாக நினைக்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

Next Story