‘ஆக்‌ஷன்’ படத்துக்காக கட் அவுட், பேனர் வைக்க விஷால் தடை


‘ஆக்‌ஷன்’ படத்துக்காக கட் அவுட், பேனர் வைக்க விஷால் தடை
x
தினத்தந்தி 12 Nov 2019 10:30 PM GMT (Updated: 12 Nov 2019 6:23 PM GMT)

நடிகர் விஷால் அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட மனு செய்து கடைசி நேரத்தில் தள்ளுபடியானது.

டிகர் விஷால் அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட மனு செய்து கடைசி நேரத்தில் தள்ளுபடியானது. தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் பொறுப்புகள் வகித்துள்ளார்.

ரசிகர் மன்ற பணிகளையும் ஒழுங்குபடுத்த ரசிகர் மன்றத்தை கடந்த வருடம் மக்கள் நல இயக்கமாக மாற்றினார். இந்த நிலையில் தனக்கு பேனர்கள், கட் அவுட்கள் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார். விஷால் நடித்துள்ள ஆக்‌ஷன் படம் வருகிற 15-ந்தேதி திரைக்கு வருகிறது.

இதையொட்டி தியேட்டர்களில் விஷாலின் கட் அவுட்கள் மற்றும் பேனர்கள் வைக்க ரசிகர்கள் ஏற்பாடு செய்து வந்தனர். இதுபற்றி கேள்விபட்ட விஷால் தனது கட் அவுட் மற்றும் பேனர்களுக்கு தடை விதித்துள்ளார். “எனக்கு ரசிகர்கள் கட் அவுட்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் கொடி தோரணங்களும் கட்ட கூடாது. அதற்கு பதிலாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள்” என்று கூறியுள்ளார்.

விஷால் மக்கள் நல இயக்க மாநில செயலாளர் ஹரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆக்‌ஷன் படம் வெளியாகும்போது விஷாலின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், கட் அவுட்கள், கொடிகளை வைக்க வேண்டாமென ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Next Story